• Sep 20 2024

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு அமெரிக்காவே காரணம்! – வெளியான புதிய தகவல் samugammedia

Chithra / Apr 6th 2023, 2:00 pm
image

Advertisement

கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்த போதிலும், தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக, அமெரிக்காவும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது.

இதனால், அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் சிலிக்கன் வெலி வங்கி, சிக்னேச்சர் வங்கி மற்றும் பெஸ்ட் ரிபப்லிக் வங்கி ஆகியன கடந்த சில வாரங்களுக்குள் மூடப்பட்டுள்ளன.

அதேவேளை, மேலும் பல வங்கிகள் மூடும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.


இதனால், வங்கிகளில் முதலீடு செய்துள்ளவர்கள், அந்த முதலீட்டு தொகையை மீளப் பெற்று, அதனை தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளமையினால், கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை கடுமையாக சர்வதேச சந்தையில் அதிகரித்து செல்வதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து செல்கின்றமையினால், இலங்கையில் ரூபா வலுவடைந்தாலும், தங்கத்தின் விலையை குறைக்க முடியாத நிலைக்கு தங்க விற்பனையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு அமெரிக்காவே காரணம் – வெளியான புதிய தகவல் samugammedia கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்த போதிலும், தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக, அமெரிக்காவும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது.இதனால், அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் சிலிக்கன் வெலி வங்கி, சிக்னேச்சர் வங்கி மற்றும் பெஸ்ட் ரிபப்லிக் வங்கி ஆகியன கடந்த சில வாரங்களுக்குள் மூடப்பட்டுள்ளன.அதேவேளை, மேலும் பல வங்கிகள் மூடும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.இதனால், வங்கிகளில் முதலீடு செய்துள்ளவர்கள், அந்த முதலீட்டு தொகையை மீளப் பெற்று, அதனை தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளமையினால், கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை கடுமையாக சர்வதேச சந்தையில் அதிகரித்து செல்வதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து செல்கின்றமையினால், இலங்கையில் ரூபா வலுவடைந்தாலும், தங்கத்தின் விலையை குறைக்க முடியாத நிலைக்கு தங்க விற்பனையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement