ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தடையின்றி கடமையாற்றுவதற்கு இடமளிக்குமாறு அந்தக் கட்சிக்கு உத்தரவிடக் கோரி, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை இம்மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்றுஉத்தரவிட்டது.
இந்த உத்தரவு இன்றைய தினம் அறிவிக்கப்படவிருந்த போதிலும், அதனை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தன்னை ஏற்றுக்கொண்டு மாவட்ட நீதிமன்றத்தினால் இதற்கு முன்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக முறைப்பாட்டாளரான தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த உத்தரவிற்கு இணங்க, குறித்த பதவியில் தம்மால் எவ்வித இடையூறுகளும் இன்றி கடமையாற்றுவதற்கு அவசியமான கட்டளையைப் பிறப்பிக்குமாறு கோரி தயாசிறி ஜயசேகர இந்த முறைப்பாட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தயாசிறி எம்.பியின் கோரிக்கை மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தடையின்றி கடமையாற்றுவதற்கு இடமளிக்குமாறு அந்தக் கட்சிக்கு உத்தரவிடக் கோரி, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை இம்மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்றுஉத்தரவிட்டது. இந்த உத்தரவு இன்றைய தினம் அறிவிக்கப்படவிருந்த போதிலும், அதனை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தன்னை ஏற்றுக்கொண்டு மாவட்ட நீதிமன்றத்தினால் இதற்கு முன்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக முறைப்பாட்டாளரான தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார். அந்த உத்தரவிற்கு இணங்க, குறித்த பதவியில் தம்மால் எவ்வித இடையூறுகளும் இன்றி கடமையாற்றுவதற்கு அவசியமான கட்டளையைப் பிறப்பிக்குமாறு கோரி தயாசிறி ஜயசேகர இந்த முறைப்பாட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.