• May 20 2026

கந்தளாயில் "முழு நாடுமே ஒன்றாக" தேசிய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்!

Ziya / May 19th 2026, 12:11 pm
image

போதைப்பொருள் அரக்கனை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்காக தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் புதிய திட்டத்தின்கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் "முழு நாடுமே ஒன்றாக" எனும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய, கந்தளாயில் இன்று (19) விசேட விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணியொன்று முன்னெடுக்கப்பட்டது.


கந்தளாய் பொலிஸார் மற்றும் கந்தளாய் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்பணி, கந்தளாய் பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக நடைபெற்றது.


இதன்போது, அந்த வீதியூடாக பயணித்த அரச மற்றும் தனியார் பொதுப் போக்குவரத்து சேவை வாகனங்கள், சொகுசு வாகனங்கள் மற்றும் ஏனைய தனியார் வாகனங்கள் என்பன நிறுத்தப்பட்டு, அவற்றில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.


இந்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களில், போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் தொடர்பான முறைப்பாடுகளை அவசரமாகத் தெரிவிப்பதற்கான ‘1818’ என்ற விசேட ஹொட்லைன் (Hotline) இலக்கம் மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள்வதற்கான விழிப்புணர்வு வாசகங்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.


இந்நிகழ்வில் கந்தளாய் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர், கந்தளாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சூரியபுர விசேட பொலிஸ் அதிகாரிகள், கந்தளாய் இராணுவ முகாமின் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் கந்தளாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


கந்தளாயில் "முழு நாடுமே ஒன்றாக" தேசிய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் போதைப்பொருள் அரக்கனை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்காக தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் புதிய திட்டத்தின்கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் "முழு நாடுமே ஒன்றாக" எனும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய, கந்தளாயில் இன்று (19) விசேட விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணியொன்று முன்னெடுக்கப்பட்டது.கந்தளாய் பொலிஸார் மற்றும் கந்தளாய் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்பணி, கந்தளாய் பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக நடைபெற்றது.இதன்போது, அந்த வீதியூடாக பயணித்த அரச மற்றும் தனியார் பொதுப் போக்குவரத்து சேவை வாகனங்கள், சொகுசு வாகனங்கள் மற்றும் ஏனைய தனியார் வாகனங்கள் என்பன நிறுத்தப்பட்டு, அவற்றில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.இந்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களில், போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் தொடர்பான முறைப்பாடுகளை அவசரமாகத் தெரிவிப்பதற்கான ‘1818’ என்ற விசேட ஹொட்லைன் (Hotline) இலக்கம் மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள்வதற்கான விழிப்புணர்வு வாசகங்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.இந்நிகழ்வில் கந்தளாய் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர், கந்தளாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சூரியபுர விசேட பொலிஸ் அதிகாரிகள், கந்தளாய் இராணுவ முகாமின் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் கந்தளாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement