உலகின் மிக வயதான ஹங்கேரி நாட்டை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் ஆக்னஸ் கெலெட்டி காலமானார்.
103 வயதான ஆக்னஸ் கெலெட்டி நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் புடாபெஸ்டில் உள்ள மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் (02) உயிரிழந்தார்.
1921 ஆம் ஆண்டு புடாபெஸ்டில் யூத குடும்பத்தில் பிறந்த இவருக்கு ஆக்னஸ் க்ளீன் என பெயர்சூட்டப்பட்டது.
பின்னர் தனது குடும்பப்பெயரை ஹங்கேரிய மொழியில் கெலேட்டி என மாற்றிக்கொண்டார்.
ஜிம்னாஸ்டிக்கில் ஆர்வம் கொண்ட இவர், இரண்டாம் உலகப் போரின்போது யூதப் பின்னணி காரணமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஹிட்லரின் நாஜி அரசால் தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும் நாஜிகளிடம் இருந்து மறைந்திருந்தும் இரகசியமாகவும் பயிற்சியைத் தொடர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவரது தந்தை மற்றும் பல குடும்ப உறுப்பினர்கள் ஹிட்லரின் இன அழித்தொழிப்பு வதை முகாம்களையே மிகவும் பெரியதும் கொடுமையானதுமான ஆஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்டனர்.
அழித்தொழிப்பில் இருந்து தப்பிய கெலெட்டி போருக்குப் பிறகு ஹங்கேரியின் மிகவும் வெற்றிகரமான ஜிம்னாஸ்ட் வீராங்கனையாக மாறினார்.
ஹெல்சின்கியில் 1952, மெல்போர்னில் 1956 ஒலிம்பிக் போட்டிகள் முதலியவற்றில் கலந்துகொண்டு 5 தங்கம் உட்பட 10 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.
இஸ்ரேலில் குடியேறி ராபர்ட் பீரோ என்பவரை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார்.
கெலெட்டி ஒரு உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினார்.
இஸ்ரேலிய தேசிய அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்தார். கடந்த 2015 இல் மீண்டும் ஹங்கேரிக்கு திரும்பி, வரும் 9ம் தேதி தனது 104வது பிறந்தநாளை கொண்டாட இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் : ஆக்னஸ் கெலெட்டி உயிரிழப்பு உலகின் மிக வயதான ஹங்கேரி நாட்டை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் ஆக்னஸ் கெலெட்டி காலமானார்.103 வயதான ஆக்னஸ் கெலெட்டி நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் புடாபெஸ்டில் உள்ள மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் (02) உயிரிழந்தார்.1921 ஆம் ஆண்டு புடாபெஸ்டில் யூத குடும்பத்தில் பிறந்த இவருக்கு ஆக்னஸ் க்ளீன் என பெயர்சூட்டப்பட்டது. பின்னர் தனது குடும்பப்பெயரை ஹங்கேரிய மொழியில் கெலேட்டி என மாற்றிக்கொண்டார். ஜிம்னாஸ்டிக்கில் ஆர்வம் கொண்ட இவர், இரண்டாம் உலகப் போரின்போது யூதப் பின்னணி காரணமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஹிட்லரின் நாஜி அரசால் தடை விதிக்கப்பட்டது.இருப்பினும் நாஜிகளிடம் இருந்து மறைந்திருந்தும் இரகசியமாகவும் பயிற்சியைத் தொடர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவரது தந்தை மற்றும் பல குடும்ப உறுப்பினர்கள் ஹிட்லரின் இன அழித்தொழிப்பு வதை முகாம்களையே மிகவும் பெரியதும் கொடுமையானதுமான ஆஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்டனர்.அழித்தொழிப்பில் இருந்து தப்பிய கெலெட்டி போருக்குப் பிறகு ஹங்கேரியின் மிகவும் வெற்றிகரமான ஜிம்னாஸ்ட் வீராங்கனையாக மாறினார். ஹெல்சின்கியில் 1952, மெல்போர்னில் 1956 ஒலிம்பிக் போட்டிகள் முதலியவற்றில் கலந்துகொண்டு 5 தங்கம் உட்பட 10 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.இஸ்ரேலில் குடியேறி ராபர்ட் பீரோ என்பவரை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார்.கெலெட்டி ஒரு உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினார். இஸ்ரேலிய தேசிய அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்தார். கடந்த 2015 இல் மீண்டும் ஹங்கேரிக்கு திரும்பி, வரும் 9ம் தேதி தனது 104வது பிறந்தநாளை கொண்டாட இருந்தது குறிப்பிடத்தக்கது.