• Jan 13 2025

கடன் சுமையில் நாடு திரும்பிய இளைஞன்; தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு...!

Anaath / Aug 31st 2024, 6:13 pm
image

நகூர் பள்ளி வீதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் இன்று (31) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முஹம்மது ஹசன் முஹம்மது அம்ஜத் (வயது 23) எனும் திருமணமாகாத இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தொழில் நிமித்தம் கடன்பெற்று  வெளிநாட்டுக்கு சென்றுள்ள குறித்த இளைஞர், அங்கு தொழில் கிடைக்காத நிலையில் அவர் பாரிய கடன் சுமையோடு மீண்டும் நாடு திரும்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று (31) காலை தனது பெற்றோர்களுடனும், இரண்டு சகோதரிகளுடனும் ஒன்றாக இருந்து உரையாடிக் கொண்டிருந்த குறித்த இளைஞர், வீட்டின் மேல் மாடியில் உள்ள படுக்கை அறையில் தாவாணி ஒன்றில் சுருக்கிட்டு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அந்த இளைஞனை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் இதுபற்றி புத்தளம் பொலிஸாருக்கும், புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாமுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

உயிரிழந்த இளைஞனின் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரதேச பரிசோதனையின் பின்னர் ஜனாஸா பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையைக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடன் சுமையில் நாடு திரும்பிய இளைஞன்; தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு. நகூர் பள்ளி வீதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் இன்று (31) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.முஹம்மது ஹசன் முஹம்மது அம்ஜத் (வயது 23) எனும் திருமணமாகாத இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தொழில் நிமித்தம் கடன்பெற்று  வெளிநாட்டுக்கு சென்றுள்ள குறித்த இளைஞர், அங்கு தொழில் கிடைக்காத நிலையில் அவர் பாரிய கடன் சுமையோடு மீண்டும் நாடு திரும்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில் இன்று (31) காலை தனது பெற்றோர்களுடனும், இரண்டு சகோதரிகளுடனும் ஒன்றாக இருந்து உரையாடிக் கொண்டிருந்த குறித்த இளைஞர், வீட்டின் மேல் மாடியில் உள்ள படுக்கை அறையில் தாவாணி ஒன்றில் சுருக்கிட்டு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அந்த இளைஞனை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.பின்னர் இதுபற்றி புத்தளம் பொலிஸாருக்கும், புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாமுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.உயிரிழந்த இளைஞனின் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரதேச பரிசோதனையின் பின்னர் ஜனாஸா பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையைக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement