• Sep 20 2024

தெல்லிப்பழை வைத்தியசாலையின் மருந்துத் தட்டுப்பாடுக்கு தீர்வளித்த இளைஞன்: குவியும் பாராட்டுக்கள்!

Sharmi / Dec 8th 2022, 1:57 pm
image

Advertisement

நாட்டில் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோயாளர்கள் மருந்து வகைகள் இன்றி பெரும் துயரங்களைச் சந்திக்கின்றனர் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் செஞ்சொற்செல்வர்  ஆறு.திருமுருகன் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத கொடை வள்ளல் ஒருவர் உடனே என்னுடன் தொடர்புகொண்டு புற்றுநோயாளர்களுக்கு என ஒரு மாதத்துக்குத் தேவையான 4 மருந்துவகைகளை முதற்கட்டமாக தனது சொந்த நிதியில் 5 லட்சத்து 8 ஆயிரம் ரூபாவுக்கு கொழும்பிலிருந்து இரு நாள்களில் கொள்வனவு செய்து  அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

தொடர்ந்தும் தன் பணி தெல்லிப்பழை வைத்தியசாலையின் நோயாளர்களுக்காகத் தொடரும் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளார்.

இந்தக் கையளிப்பு நிகழ்வில் தெல்லிப்பழை வைத்தியசாலையின் திட்டமிடல் வைத்திய உத்தியோகத்தர் வைத்தியர் ஜனனி, நிர்வாக உத்தியோகத்தர், தாதிய பரிபாலகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தெல்லிப்பழை வைத்தியசாலையின் மருந்துத் தட்டுப்பாடுக்கு தீர்வளித்த இளைஞன்: குவியும் பாராட்டுக்கள் நாட்டில் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோயாளர்கள் மருந்து வகைகள் இன்றி பெரும் துயரங்களைச் சந்திக்கின்றனர் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் செஞ்சொற்செல்வர்  ஆறு.திருமுருகன் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.இந்நிலையில் தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத கொடை வள்ளல் ஒருவர் உடனே என்னுடன் தொடர்புகொண்டு புற்றுநோயாளர்களுக்கு என ஒரு மாதத்துக்குத் தேவையான 4 மருந்துவகைகளை முதற்கட்டமாக தனது சொந்த நிதியில் 5 லட்சத்து 8 ஆயிரம் ரூபாவுக்கு கொழும்பிலிருந்து இரு நாள்களில் கொள்வனவு செய்து  அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.தொடர்ந்தும் தன் பணி தெல்லிப்பழை வைத்தியசாலையின் நோயாளர்களுக்காகத் தொடரும் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளார். இந்தக் கையளிப்பு நிகழ்வில் தெல்லிப்பழை வைத்தியசாலையின் திட்டமிடல் வைத்திய உத்தியோகத்தர் வைத்தியர் ஜனனி, நிர்வாக உத்தியோகத்தர், தாதிய பரிபாலகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement