நாட்டில் தற்போது இரண்டு ஜனாதிபதிகள் பதவியில் உள்ளதாகவே தெரிகின்றது என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒருபுறம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்கின்றார்.
மறுபுறம் முன்னான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார்.
நாம் இது தொடர்பாக சிந்தித்தே பல விடயங்களை வினவுகின்றோம்.
தனியார் மயமாக்கல் மறுசீரமைப்பு போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதனை புதிய அரசாங்கம் இடைநிறுத்த வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ கோரியிருந்தார்.
அந்த பணிகள் புதிய அரசாங்கத்தினாலேயே முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மின்சார சபை மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பிரகாரம் அவை கைவிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது இரண்டு ஜனாதிபதிகள் பதவியில். சபையில் எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு நாட்டில் தற்போது இரண்டு ஜனாதிபதிகள் பதவியில் உள்ளதாகவே தெரிகின்றது என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒருபுறம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்கின்றார்.மறுபுறம் முன்னான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார்.நாம் இது தொடர்பாக சிந்தித்தே பல விடயங்களை வினவுகின்றோம். தனியார் மயமாக்கல் மறுசீரமைப்பு போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதனை புதிய அரசாங்கம் இடைநிறுத்த வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ கோரியிருந்தார். அந்த பணிகள் புதிய அரசாங்கத்தினாலேயே முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் மின்சார சபை மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பிரகாரம் அவை கைவிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.