வடமாகாணத்தில் உள்ள தென்னை மரங்களில் அதிவேகமாகப் பரவி வரும் வெள்ளை ஈக்களால் தென்னை மரங்கள் முற்றுமுழுதாக அழிவடையும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் அதனைக் கட் டுப்படுத்தும் நடவடிக்கைகள் இன்ன மும் மந்தமாகவே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் வெள்ளை ஈக்களின் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.
இதன் காரணமாக வடபகுதியின் மிகப்பெரும் வளமான தென்னை வளம் முற்று முழுதாக அழிந்து போகின்ற ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.
இதேவேளை எந்தக் காலத்திலும் இல்லாதவாறு வடபகுதியில் வெள்ளை ஈக்கள் எவ்வாறு உள்நுழைந்தன என்பது குறித்து பலத்த சந்தேகம் எழுந்துள்ளதுடன், வடபகுதியின் தென்னை வளத்தை முற்றுமுழுதாக அழிக்கும் வெள்ளை ஈக்கள் இங்கு பரப்பப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை துறை சார்நிபுணர்கள் எழுப்பியுள்ளனர்.
வடமாகாணத்தில் தென்னை வளம் முற்று முழுதாக அழிவடையும் ஆபத்து. திட்டமிட்ட சதி என அதிகாரிகள் சந்தேகம். வடமாகாணத்தில் உள்ள தென்னை மரங்களில் அதிவேகமாகப் பரவி வரும் வெள்ளை ஈக்களால் தென்னை மரங்கள் முற்றுமுழுதாக அழிவடையும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் அதனைக் கட் டுப்படுத்தும் நடவடிக்கைகள் இன்ன மும் மந்தமாகவே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் வெள்ளை ஈக்களின் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.இதன் காரணமாக வடபகுதியின் மிகப்பெரும் வளமான தென்னை வளம் முற்று முழுதாக அழிந்து போகின்ற ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. இதேவேளை எந்தக் காலத்திலும் இல்லாதவாறு வடபகுதியில் வெள்ளை ஈக்கள் எவ்வாறு உள்நுழைந்தன என்பது குறித்து பலத்த சந்தேகம் எழுந்துள்ளதுடன், வடபகுதியின் தென்னை வளத்தை முற்றுமுழுதாக அழிக்கும் வெள்ளை ஈக்கள் இங்கு பரப்பப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை துறை சார்நிபுணர்கள் எழுப்பியுள்ளனர்.