• Nov 17 2024

வங்காள விரிகுடாவில் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்பு- வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு..!

Sharmi / Nov 7th 2024, 1:03 pm
image

வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இன்றையதினம் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்களில் நாட்டில் கால நிலை மாற்றம் காணப்படுகிறது.

அதாவது பகல் வேலைகளில் வெப்பமான காலநிலையும் இரவு நேரத்தில் கடும் மழையுடனான காலநிலையும் காணப்படுகிறது.

ஆனால் இன்று வடக்கு வடமத்திய, மற்றும் திருகோணமலை, புத்தளம் மாவட்டங்களில் 50mm வரை மழை வீழ்ச்சிக்கு வாய்ப்புள்ளது 

அதேவேளை, நாட்டில் மத்திய, சப்ரகமுவ, ஊவா,தெற்கு மாகாணங்களில் பகல், அல்லது இரவு காலங்களில் மழைவீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிக மழை வீழ்ச்சி காரணமாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யலாம்.

எனவே இடி மின்னலில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்

மற்றும் புத்தளம் முதல் காங்கேசன்துறையுடன் திருகோணமலை வரை காலி தொடக்கம் பொத்துவில் வரை மழை வீழ்ச்சி ஏற்பட்ட வாய்ப்புள்ளது.

காற்றின் வேகமும் 40-50 km/h  வேகத்தில் வீசும்

காலநிலை இவ்வாறு இருப்பினும் திருகோணமலை முதல் வடக்கு கிழக்கில் இருந்து வங்காள விரிகுடாவில் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.


வங்காள விரிகுடாவில் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்பு- வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு. வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இன்றையதினம் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த நாட்களில் நாட்டில் கால நிலை மாற்றம் காணப்படுகிறது.அதாவது பகல் வேலைகளில் வெப்பமான காலநிலையும் இரவு நேரத்தில் கடும் மழையுடனான காலநிலையும் காணப்படுகிறது.ஆனால் இன்று வடக்கு வடமத்திய, மற்றும் திருகோணமலை, புத்தளம் மாவட்டங்களில் 50mm வரை மழை வீழ்ச்சிக்கு வாய்ப்புள்ளது அதேவேளை, நாட்டில் மத்திய, சப்ரகமுவ, ஊவா,தெற்கு மாகாணங்களில் பகல், அல்லது இரவு காலங்களில் மழைவீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது.அதிக மழை வீழ்ச்சி காரணமாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யலாம். எனவே இடி மின்னலில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்மற்றும் புத்தளம் முதல் காங்கேசன்துறையுடன் திருகோணமலை வரை காலி தொடக்கம் பொத்துவில் வரை மழை வீழ்ச்சி ஏற்பட்ட வாய்ப்புள்ளது.காற்றின் வேகமும் 40-50 km/h  வேகத்தில் வீசும்காலநிலை இவ்வாறு இருப்பினும் திருகோணமலை முதல் வடக்கு கிழக்கில் இருந்து வங்காள விரிகுடாவில் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement