• Jul 13 2025

மீண்டும் தேங்காய் விலை உயர்வடையும் சாத்தியம்

Chithra / Jul 13th 2025, 7:53 am
image

நாட்டில் மீண்டும் தேங்காய் விலை உயர்வடையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் விலங்குகளால் தேங்காய் அறுவடை சேதமடைந்ததால், சந்தையில் தேங்காய் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் தேங்காய் உற்பத்தி பொருக்களின் விலையும் அதிகரித்தன.

கடந்த சில மாதங்களாக 220 ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய் சில தினங்களுக்கு முன்னர் சந்தையில் 

​​100 முதல் 170 ரூபா வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டது.

சில வியாபாரிகள் அதிக இலாபத்துடன் தேங்காய்களை விற்பனை செய்வதாகவும், அப்போது தேங்காய் விற்பனை குறைந்ததால் வருமான நிலையும் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் சந்தையில் மீண்டும் தேங்காயின் விலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் வருடம்தோரும் மேற்கொள்ளப்படும் தேங்காய் அறுவடையின் அளவு எதிர்பார்த்ததை விடவும் இவ்வருடம் குறைந்துள்ளதாக தென்னை வேளாண்மை சபை தலைவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் தேங்காய் அறுவடை மூலம் 3,000 மில்லியன் தேங்காய்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் 246 மில்லியன் தேங்காய்கள் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்னை இருவார விழா குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்ற சுனிமல் ஜெயக்கொடி, எந்த காரணத்திற்காகவும் தென்னை மரங்களை வெட்டுவது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் தேங்காய் விலை உயர்வடையும் சாத்தியம் நாட்டில் மீண்டும் தேங்காய் விலை உயர்வடையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் விலங்குகளால் தேங்காய் அறுவடை சேதமடைந்ததால், சந்தையில் தேங்காய் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் தேங்காய் உற்பத்தி பொருக்களின் விலையும் அதிகரித்தன.கடந்த சில மாதங்களாக 220 ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய் சில தினங்களுக்கு முன்னர் சந்தையில் ​​100 முதல் 170 ரூபா வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டது.சில வியாபாரிகள் அதிக இலாபத்துடன் தேங்காய்களை விற்பனை செய்வதாகவும், அப்போது தேங்காய் விற்பனை குறைந்ததால் வருமான நிலையும் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.இவ்வாறான நிலையில் சந்தையில் மீண்டும் தேங்காயின் விலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, நாட்டில் வருடம்தோரும் மேற்கொள்ளப்படும் தேங்காய் அறுவடையின் அளவு எதிர்பார்த்ததை விடவும் இவ்வருடம் குறைந்துள்ளதாக தென்னை வேளாண்மை சபை தலைவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.இவ்வருடம் தேங்காய் அறுவடை மூலம் 3,000 மில்லியன் தேங்காய்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் 246 மில்லியன் தேங்காய்கள் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தென்னை இருவார விழா குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்ற சுனிமல் ஜெயக்கொடி, எந்த காரணத்திற்காகவும் தென்னை மரங்களை வெட்டுவது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement