• Dec 27 2024

நாடளாவிய ரீதியில் சிவப்பு பச்சையரிசிக்கு தட்டுப்பாடு!

Tamil nila / Dec 21st 2024, 6:19 pm
image

நாடளாவிய ரீதியில் சிவப்பு பச்சையரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேல் மாகாணத்தில் 99 வீதமான கடைகளில் சிவப்பு பச்சை அரிசி விற்பனைக்கு இல்லை என நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

சில தனியார் கடைகளில் நிபந்தனைகளுடன் சிவப்பு பச்சை அரிசி வியாபாரம் நடப்பதாகவும், 500 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால், 2 கிலோ சிவப்பு பச்சை அரிசி, கட்டுப்பாட்டு விலையை விட 20 அல்லது 30 ரூபாய் மேலதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல பல்பொருள் அங்காடிகளில் சிவப்பு அரிசி விற்பனைக்கு இல்லை. எனினும், அந்த கடைகளில் நாட்டு அரிசி மற்றும் கீரி சம்பா அரிசி விற்பனைக்கு காணப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சில மொத்த வியாபாரிகள் மொத்த விலையில் அரிசி விற்பனை செய்வதை நிறுத்திவிட்டு, அதிக விலை பெறும் நோக்கில் சில்லறை விலையில் அரிசியை விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.


நாடளாவிய ரீதியில் சிவப்பு பச்சையரிசிக்கு தட்டுப்பாடு நாடளாவிய ரீதியில் சிவப்பு பச்சையரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேல் மாகாணத்தில் 99 வீதமான கடைகளில் சிவப்பு பச்சை அரிசி விற்பனைக்கு இல்லை என நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.சில தனியார் கடைகளில் நிபந்தனைகளுடன் சிவப்பு பச்சை அரிசி வியாபாரம் நடப்பதாகவும், 500 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால், 2 கிலோ சிவப்பு பச்சை அரிசி, கட்டுப்பாட்டு விலையை விட 20 அல்லது 30 ரூபாய் மேலதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல பல்பொருள் அங்காடிகளில் சிவப்பு அரிசி விற்பனைக்கு இல்லை. எனினும், அந்த கடைகளில் நாட்டு அரிசி மற்றும் கீரி சம்பா அரிசி விற்பனைக்கு காணப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, சில மொத்த வியாபாரிகள் மொத்த விலையில் அரிசி விற்பனை செய்வதை நிறுத்திவிட்டு, அதிக விலை பெறும் நோக்கில் சில்லறை விலையில் அரிசியை விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement