• Nov 28 2024

கல்விக்கு வயது தடை இல்லை..! சாதாரண தர கணித பாடத்திற்கு தோற்றிய 80 வயது முதியவர்

Chithra / May 14th 2024, 7:54 am
image

தற்போது நடைபெற்று வரும் சாதாரண தர பரீட்சையில் 80 வயது முதியவர் ஒருவர் கணித பாடத்திற்கு தோற்றி தனது கல்வி மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பாணந்துறை கிரிபெரிய பிரதேசத்தில் இருந்து அவர் இந்த பரீட்சைக்கு தோற்றியுள்ளார். நிமல் சில்வா என்ற முதியவரே இவ்வாறு பரீட்சைக்கு தோற்றியவராவார்.

இவர் ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. 

கல்விக்கு வயது ஒரு தடை இல்லை என்பார்கள். வயது சென்றாலும் கல்வியின் மீதான ஈடுபாடு குறையாத இவர் பரீட்சைக்கு தோற்றியமை பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

கல்விக்கு வயது தடை இல்லை. சாதாரண தர கணித பாடத்திற்கு தோற்றிய 80 வயது முதியவர் தற்போது நடைபெற்று வரும் சாதாரண தர பரீட்சையில் 80 வயது முதியவர் ஒருவர் கணித பாடத்திற்கு தோற்றி தனது கல்வி மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.பாணந்துறை கிரிபெரிய பிரதேசத்தில் இருந்து அவர் இந்த பரீட்சைக்கு தோற்றியுள்ளார். நிமல் சில்வா என்ற முதியவரே இவ்வாறு பரீட்சைக்கு தோற்றியவராவார்.இவர் ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. கல்விக்கு வயது ஒரு தடை இல்லை என்பார்கள். வயது சென்றாலும் கல்வியின் மீதான ஈடுபாடு குறையாத இவர் பரீட்சைக்கு தோற்றியமை பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement