• Oct 19 2026

“பொருளாதார நீதிக்கான பெண்கள் கூட்டமைப்பின்” பொகவந்தலாவ பிரகடனம்

Ziya / Oct 19th 2026, 3:09 pm
image

இலங்கையில் கிராமப்புறங்கள் மற்றும் தோட்டங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் “பொருளாதார நீதிக்கான பெண்கள் கூட்டமைப்பின்” கூட்டம் நேற்று முன்தினம் ஞாயிற்றுகிழமை (18) பொகவந்தலாவ பிளான்டர்ஸ் கிளப் மண்டபத்தில் அதன் நிறைவேற்று முகாமையாளர் சத்துரிக்கா செவ்வந்தி தலைமையில் இடம்பெற்றது. நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து தமிழ், சிங்கள அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 150 பெண்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் “பொகவந்தலாவ பிரகடனம்” வெளியிடப்பட்டது.


பிரகடனத்தின் விபரம் வருமாறு:


உலகத்திலும் இலங்கையிலும் விவசாயம், உணவு உற்பத்தி மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்தில் பெண்களே முக்கிய பங்கு வகிக்கின்றார்கள். வளரும் நாடுகளில் விவசாயத் தொழிலாளர்களில் 43% பெண்கள் ஆவர். உலகின் உணவு உற்பத்தியில் பெரும் பகுதி பெண்களின் கைகளாலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது. நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் உற்பத்தி மற்றும் தேயிலை உள்ளிட்ட தோட்டத் தொழில்கள் பெண்களின் உழைப்பைச் சார்ந்துள்ளன. எனினும், பெண்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை. பொருளாதாரத்தின் முதுகெலும்பான பெண்கள் மதிக்கப்பட வேண்டும்.


முதலாளித்துவம் இலாபத்தை நோக்கமாகக் கொண்டு உழைப்பைச் சுரண்டுகின்றது. ஆணாதிக்கம் காரணமாக வீட்டு வேலைகளையும், குழந்தை பராமரிப்பு, விவசாயத்தையும் மேற்கொள்ளும் பெண்கள், போதுமான ஊதியம் இன்றி அடிப்படை வசதிகளைப் பெறுவதில் சிரமத்தை அனுபவித்து புறக்கணிக்கப்படும் நிலைமை மாற வேண்டும்.


இரசாயன உரங்கள், விதை உரிமைகள், சந்தைகள் மற்றும் இறக்குமதிகளை சார்ந்திருக்கும் தற்போதைய பெருநிறுவன மற்றும் தொழில்துறை விவசாய முறையானது, மக்களின் உணவு இறையாண்மையை அழித்து விட்டது. அது, சூழல் அமைப்புகளையும், உயிர்களையும் அழித்துக் கொண்டே இலாபத்தைக் குவிக்க வழிவகுக்கின்றது. உணவு இறையாண்மையை உருவாக்க ஒரு கூட்டு உத்தியாக உள்ளூர் விதைகள், சுற்றுச் சூழலுக்கு உகந்த விவசாய முறைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.


சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற உலகப் பொருளாதார சக்திகளால் முன்னெடுக்கப்படும் பொது சிக்கனக் கொள்கைகள் சுகாதாரம், கல்வி மற்றும் நலன்களைக் குறைத்து மக்களை கடனில் தள்ளியுள்ளன. உலகளாவிய கடன் மற்றும் பொருளாதார அமைப்பு அநீதியானது என்பதால் அதை எதிர்த்து மாற்று வழிகளை உருவாக்க வேண்டும்.


சுரண்டலையும், இலாப வேட்கைகளையும் அடிப்படையாகக் கொண்ட தற்போதைய பொருளாதார அமைப்பு இயற்கையின் புத்துயிர் பெறும் திறனை அழித்து விட்டது. அதனால், காலநிலை மாற்றமும் இயற்கைப் பேரழிவுகளும் ஏழைகளை குறிப்பாக கிராமப்புறப் பெண்களை சமமற்ற விகிதத்தில் பாதித்துள்ளன. பெண்களின் கவனிப்பு, போஷாக்கு மற்றும் சகவாழ்வு ஆகிய விழுமியங்கள் பாதிக்கப்படுவதால் பெண்ணிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட முறைமை கட்டியெழுப்பப்பட வேண்டும். 


யுத்தங்கள், மோதல்கள் மற்றும் இனவாதம் ஆகியவை உயிர்களையும் வளங்களையும் மட்டுமல்லாமல் மக்களது கூட்டு மனித நேயத்தையும் அழித்துள்ளன. இதை நாம் எதிர்ப்பதோடு, அனைத்து இனங்கள், மதங்கள், மற்றும் சமூகக் குழுக்களைச் சேர்ந்த பெண்களிடையே ஒற்றுமையை வலியுறுத்துகிறோம்.


சர்வதேச கிராமப்புற பெண்கள் தினத்தில் எங்கள் உழைப்புக்கு மரியாதையும், உரிமைகளுக்கு கௌரவமும் பெறுவதற்கு உணவு இறையாண்மை மற்றும் நீதிக்காக ஒன்றிணைவோம் என்பனவாகும். 

“பொருளாதார நீதிக்கான பெண்கள் கூட்டமைப்பின்” பொகவந்தலாவ பிரகடனம் இலங்கையில் கிராமப்புறங்கள் மற்றும் தோட்டங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் “பொருளாதார நீதிக்கான பெண்கள் கூட்டமைப்பின்” கூட்டம் நேற்று முன்தினம் ஞாயிற்றுகிழமை (18) பொகவந்தலாவ பிளான்டர்ஸ் கிளப் மண்டபத்தில் அதன் நிறைவேற்று முகாமையாளர் சத்துரிக்கா செவ்வந்தி தலைமையில் இடம்பெற்றது. நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து தமிழ், சிங்கள அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 150 பெண்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் “பொகவந்தலாவ பிரகடனம்” வெளியிடப்பட்டது.பிரகடனத்தின் விபரம் வருமாறு:உலகத்திலும் இலங்கையிலும் விவசாயம், உணவு உற்பத்தி மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்தில் பெண்களே முக்கிய பங்கு வகிக்கின்றார்கள். வளரும் நாடுகளில் விவசாயத் தொழிலாளர்களில் 43% பெண்கள் ஆவர். உலகின் உணவு உற்பத்தியில் பெரும் பகுதி பெண்களின் கைகளாலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது. நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் உற்பத்தி மற்றும் தேயிலை உள்ளிட்ட தோட்டத் தொழில்கள் பெண்களின் உழைப்பைச் சார்ந்துள்ளன. எனினும், பெண்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை. பொருளாதாரத்தின் முதுகெலும்பான பெண்கள் மதிக்கப்பட வேண்டும்.முதலாளித்துவம் இலாபத்தை நோக்கமாகக் கொண்டு உழைப்பைச் சுரண்டுகின்றது. ஆணாதிக்கம் காரணமாக வீட்டு வேலைகளையும், குழந்தை பராமரிப்பு, விவசாயத்தையும் மேற்கொள்ளும் பெண்கள், போதுமான ஊதியம் இன்றி அடிப்படை வசதிகளைப் பெறுவதில் சிரமத்தை அனுபவித்து புறக்கணிக்கப்படும் நிலைமை மாற வேண்டும்.இரசாயன உரங்கள், விதை உரிமைகள், சந்தைகள் மற்றும் இறக்குமதிகளை சார்ந்திருக்கும் தற்போதைய பெருநிறுவன மற்றும் தொழில்துறை விவசாய முறையானது, மக்களின் உணவு இறையாண்மையை அழித்து விட்டது. அது, சூழல் அமைப்புகளையும், உயிர்களையும் அழித்துக் கொண்டே இலாபத்தைக் குவிக்க வழிவகுக்கின்றது. உணவு இறையாண்மையை உருவாக்க ஒரு கூட்டு உத்தியாக உள்ளூர் விதைகள், சுற்றுச் சூழலுக்கு உகந்த விவசாய முறைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற உலகப் பொருளாதார சக்திகளால் முன்னெடுக்கப்படும் பொது சிக்கனக் கொள்கைகள் சுகாதாரம், கல்வி மற்றும் நலன்களைக் குறைத்து மக்களை கடனில் தள்ளியுள்ளன. உலகளாவிய கடன் மற்றும் பொருளாதார அமைப்பு அநீதியானது என்பதால் அதை எதிர்த்து மாற்று வழிகளை உருவாக்க வேண்டும்.சுரண்டலையும், இலாப வேட்கைகளையும் அடிப்படையாகக் கொண்ட தற்போதைய பொருளாதார அமைப்பு இயற்கையின் புத்துயிர் பெறும் திறனை அழித்து விட்டது. அதனால், காலநிலை மாற்றமும் இயற்கைப் பேரழிவுகளும் ஏழைகளை குறிப்பாக கிராமப்புறப் பெண்களை சமமற்ற விகிதத்தில் பாதித்துள்ளன. பெண்களின் கவனிப்பு, போஷாக்கு மற்றும் சகவாழ்வு ஆகிய விழுமியங்கள் பாதிக்கப்படுவதால் பெண்ணிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட முறைமை கட்டியெழுப்பப்பட வேண்டும். யுத்தங்கள், மோதல்கள் மற்றும் இனவாதம் ஆகியவை உயிர்களையும் வளங்களையும் மட்டுமல்லாமல் மக்களது கூட்டு மனித நேயத்தையும் அழித்துள்ளன. இதை நாம் எதிர்ப்பதோடு, அனைத்து இனங்கள், மதங்கள், மற்றும் சமூகக் குழுக்களைச் சேர்ந்த பெண்களிடையே ஒற்றுமையை வலியுறுத்துகிறோம்.சர்வதேச கிராமப்புற பெண்கள் தினத்தில் எங்கள் உழைப்புக்கு மரியாதையும், உரிமைகளுக்கு கௌரவமும் பெறுவதற்கு உணவு இறையாண்மை மற்றும் நீதிக்காக ஒன்றிணைவோம் என்பனவாகும். 

Advertisement

Advertisement

Advertisement