• Oct 19 2026

நள்ளிரவில் கொழும்பில் எரிந்த தீப்பந்தங்கள் – மீண்டும் களத்தில் கஸ்ஸப தேரர் – தீவிரமடையும் பிக்குகளின் போர்

Chithra / Oct 19th 2026, 10:57 am
image



கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில், கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பௌத்த பிக்குகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது.


இதேவேளை இப்போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் முகமாக நேற்று இரவு முதல் இரவு வேலைகளில் தீப்பந்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அங்கு கூடியிருந்த பிக்குகள் தெரிவித்ததோடு, பிக்குமார்கள் மற்றும் அங்கு சமூகம் தந்திருந்த  பொதுமக்களும்  சேர்ந்து "தீ பந்தங்களை" கைகளில் ஏந்தியவாறு அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு இருந்தனர். 


இந்தப் போராட்டம் ஒக்டோபர் 16ஆம் திகதி மதியம் பிக்குகள் விகாரமகாதேவி பூங்காவிற்கு வந்தடைந்தபோது ஆரம்பிக்கப்பட்டது. 


அதேநாள், ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்தில் கூடாரம் ஒன்றை அமைக்க முயன்றபோது, பிக்குகளுக்கும் பொலிசாருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டது. 


கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை தாம் பூங்காவை விட்டுச் செல்லப் போவதில்லை என சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில், கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர், மீண்டும் போராட்டத்தில் இணைந்துள்ளார்.


குறித்த போராட்டத்தின்போது ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, பலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில் சிகிச்சைக்குப் பின்னர் அவர் நேற்று மீண்டும் விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்று வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நள்ளிரவில் கொழும்பில் எரிந்த தீப்பந்தங்கள் – மீண்டும் களத்தில் கஸ்ஸப தேரர் – தீவிரமடையும் பிக்குகளின் போர் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில், கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பௌத்த பிக்குகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது.இதேவேளை இப்போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் முகமாக நேற்று இரவு முதல் இரவு வேலைகளில் தீப்பந்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அங்கு கூடியிருந்த பிக்குகள் தெரிவித்ததோடு, பிக்குமார்கள் மற்றும் அங்கு சமூகம் தந்திருந்த  பொதுமக்களும்  சேர்ந்து "தீ பந்தங்களை" கைகளில் ஏந்தியவாறு அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு இருந்தனர். இந்தப் போராட்டம் ஒக்டோபர் 16ஆம் திகதி மதியம் பிக்குகள் விகாரமகாதேவி பூங்காவிற்கு வந்தடைந்தபோது ஆரம்பிக்கப்பட்டது. அதேநாள், ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்தில் கூடாரம் ஒன்றை அமைக்க முயன்றபோது, பிக்குகளுக்கும் பொலிசாருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டது. கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை தாம் பூங்காவை விட்டுச் செல்லப் போவதில்லை என சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில், கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர், மீண்டும் போராட்டத்தில் இணைந்துள்ளார்.குறித்த போராட்டத்தின்போது ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, பலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் சிகிச்சைக்குப் பின்னர் அவர் நேற்று மீண்டும் விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்று வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement