• Oct 19 2026

செம்மணியின் மர்மங்கள் விலகுமா? சோமரத்ன ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற அனுமதி

Chithra / Oct 19th 2026, 12:37 pm
image


யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முக்கிய அறிக்கையொன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளிலும் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.


செம்மணி அகழ்வுப் பணிகளுக்குத் தலைமை தாங்கும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தயாரித்த இடைக்கால அறிக்கை, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


நீதவான் எஸ். லெனில் குமார் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.


இதனையடுத்து, அறிக்கையைப் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் ஏனைய உரிய தரப்பினருக்கும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதற்கிடையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.


மனித எச்சங்களின் காலத்தை அறிவதற்கான C-14 கார்பன் பரிசோதனை மாதிரிகளை விரைவாக அனுப்புவது முதலாவது கோரிக்கையாகும்.


இரண்டாவதாக, செம்மணி புதைகுழி வழக்குடன் தொடர்புடைய, ஏற்கனவே சிறைச்சாலையில் உள்ள லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற அனுமதி கோரப்பட்டது.


இதில் முக்கிய திருப்பமாக, சோமரத்ன ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


அதேவேளை, C-14 பரிசோதனை மாதிரிகளை அனுப்புவது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி நடைபெறும் நிர்வாகக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது.


மனித எலும்புகளைப் பரிசோதிக்கும் நிபுணர் குழுவின் விபரங்கள் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.


இதனையடுத்து, வழக்கு மீண்டும் நவம்பர் 19ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


செம்மணியின் மர்மங்கள் விலகுமா சோமரத்ன ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற அனுமதி யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முக்கிய அறிக்கையொன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளிலும் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.செம்மணி அகழ்வுப் பணிகளுக்குத் தலைமை தாங்கும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தயாரித்த இடைக்கால அறிக்கை, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நீதவான் எஸ். லெனில் குமார் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.இதனையடுத்து, அறிக்கையைப் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் ஏனைய உரிய தரப்பினருக்கும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.மனித எச்சங்களின் காலத்தை அறிவதற்கான C-14 கார்பன் பரிசோதனை மாதிரிகளை விரைவாக அனுப்புவது முதலாவது கோரிக்கையாகும்.இரண்டாவதாக, செம்மணி புதைகுழி வழக்குடன் தொடர்புடைய, ஏற்கனவே சிறைச்சாலையில் உள்ள லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற அனுமதி கோரப்பட்டது.இதில் முக்கிய திருப்பமாக, சோமரத்ன ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.அதேவேளை, C-14 பரிசோதனை மாதிரிகளை அனுப்புவது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி நடைபெறும் நிர்வாகக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது.மனித எலும்புகளைப் பரிசோதிக்கும் நிபுணர் குழுவின் விபரங்கள் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.இதனையடுத்து, வழக்கு மீண்டும் நவம்பர் 19ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement