• Oct 20 2026

பல் துலக்க முடியாத அளவுக்கு வலி! மாணவனை சரமாரியாக அறைந்த அதிபர்! தட்டிக்கேட்ட அதிகாரிக்கும் நெருக்கடி

Chithra / Oct 19th 2026, 11:33 am
image

 

பண்டாரகம, வெல்மில்ல பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் தரம் 7 மாணவனை, பாடசாலை அதிபர் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டி, குறித்த மாணவனை அதிபர் தாக்கியதாக பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


மாணவனின் தந்தை அளித்துள்ள முறைப்பாட்டின்படி, பாடசாலை அதிபர் தனது இரு கைகளாலும் மாணவனின் கன்னங்களில் பலமுறை அறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தத் தாக்குதலால் மாணவனின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கடுமையான வலி காரணமாகப் பல் துலக்கக்கூட முடியாத நிலையில் மாணவன் இருப்பதாகவும் தந்தை தெரிவித்துள்ளார்.


தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் மாணவன், சிகிச்சைக்காக முதலில் வெத்தர மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


இந்தத் கொடூரத் தாக்குதலைப் பாடசாலையில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தனது கைத்தொலைபேசியில் பதிவு செய்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதனால் அதிபர் அவர் மீது ஆத்திரமடைந்துள்ளார்.


அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, ஏனைய ஆசிரியர்கள் மூலம் மனு ஒன்றில் கையொப்பம் பெற்று, குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தரைப் பாடசாலையிலிருந்து நீக்குவதற்கு அதிபர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதற்கு ஹொரணை வலயக் கல்வி அலுவலகத்தின் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மாணவர் மீதான தாக்குதல் மற்றும் தனது வேலைக்கு ஏற்பட்டுள்ள சட்டவிரோத நெருக்கடிகள் குறித்துச் சம்மந்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.


இந்தச் சம்பவம் தொடர்பாகப் பண்டாரகம பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

பல் துலக்க முடியாத அளவுக்கு வலி மாணவனை சரமாரியாக அறைந்த அதிபர் தட்டிக்கேட்ட அதிகாரிக்கும் நெருக்கடி  பண்டாரகம, வெல்மில்ல பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் தரம் 7 மாணவனை, பாடசாலை அதிபர் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டி, குறித்த மாணவனை அதிபர் தாக்கியதாக பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மாணவனின் தந்தை அளித்துள்ள முறைப்பாட்டின்படி, பாடசாலை அதிபர் தனது இரு கைகளாலும் மாணவனின் கன்னங்களில் பலமுறை அறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதலால் மாணவனின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கடுமையான வலி காரணமாகப் பல் துலக்கக்கூட முடியாத நிலையில் மாணவன் இருப்பதாகவும் தந்தை தெரிவித்துள்ளார்.தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் மாணவன், சிகிச்சைக்காக முதலில் வெத்தர மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இந்தத் கொடூரத் தாக்குதலைப் பாடசாலையில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தனது கைத்தொலைபேசியில் பதிவு செய்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதனால் அதிபர் அவர் மீது ஆத்திரமடைந்துள்ளார்.அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, ஏனைய ஆசிரியர்கள் மூலம் மனு ஒன்றில் கையொப்பம் பெற்று, குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தரைப் பாடசாலையிலிருந்து நீக்குவதற்கு அதிபர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதற்கு ஹொரணை வலயக் கல்வி அலுவலகத்தின் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மாணவர் மீதான தாக்குதல் மற்றும் தனது வேலைக்கு ஏற்பட்டுள்ள சட்டவிரோத நெருக்கடிகள் குறித்துச் சம்மந்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பாகப் பண்டாரகம பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement