• Oct 19 2026

மழையுடன் வரும் பேராபத்து? மீண்டும் பெருந்தொற்றா? இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

Chithra / Oct 19th 2026, 11:37 am
image


நாட்டில் தற்போது நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய் பரவல் மீண்டும் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதனையடுத்து, டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக்கூடிய இடங்களை உடனடியாகக் கண்டறிந்து அகற்றுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


முறையான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் நாட்களில் டெங்கு நோய் மீண்டும் பெருந்தொற்று நிலையை எட்டக்கூடும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர எச்சரித்துள்ளார்.


குறிப்பாக, மழைக்காலங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை, வீடுகள், பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழல்களில் நீர் தேங்கி நிற்கக்கூடிய இடங்களை அடிக்கடி பரிசோதித்து, அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


டெங்கு பரவல் மீண்டும் தீவிரமடைவதைத் தடுப்பதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மாத்திரம் போதுமானதல்ல எனவும், பொதுமக்கள் அனைவரும் தமது சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பேணுவதன் மூலம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வைத்தியர் கபில கன்னங்கர வலியுறுத்தியுள்ளார்.


மழையுடன் வரும் பேராபத்து மீண்டும் பெருந்தொற்றா இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை நாட்டில் தற்போது நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய் பரவல் மீண்டும் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனையடுத்து, டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக்கூடிய இடங்களை உடனடியாகக் கண்டறிந்து அகற்றுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முறையான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் நாட்களில் டெங்கு நோய் மீண்டும் பெருந்தொற்று நிலையை எட்டக்கூடும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர எச்சரித்துள்ளார்.குறிப்பாக, மழைக்காலங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, வீடுகள், பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழல்களில் நீர் தேங்கி நிற்கக்கூடிய இடங்களை அடிக்கடி பரிசோதித்து, அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.டெங்கு பரவல் மீண்டும் தீவிரமடைவதைத் தடுப்பதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மாத்திரம் போதுமானதல்ல எனவும், பொதுமக்கள் அனைவரும் தமது சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பேணுவதன் மூலம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வைத்தியர் கபில கன்னங்கர வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement