• Apr 27 2025

மக்களை சமனாக நடத்தினால் கட்சிகள் தேவையில்லை! சத்தியலிங்கம் கருத்து

Chithra / Apr 26th 2025, 1:01 pm
image


மூவின மக்களும் இந்த நாட்டில் எப்போது சமமாக மதிக்கப்படுகின்றார்களோ அன்று தான் தமிழ்கட்சி சிங்களகட்சி,முஸ்லீம் கட்சி என்ற தேவை இருக்காது. அந்த நிலையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியாவில் தந்தை செல்வநாயகத்தின் நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…

மோகம் 30 நாள் என்று சொல்வார்கள். அந்த மோகத்தில் வந்த ஒரு கட்சி தாங்கள்தான் தமிழ்மக்கள், முஸ்லீம் மக்களுடைய ஒட்டுமொத்த பிரதிநிதிகள்  என்று சொல்கிறார்கள். ஒரு தேர்தலில் வென்றுவிட்டு அப்பிடி சொல்லமுடியாது. இந்த தேர்தல் முறையால் மாத்திரமே அவர்கள் வென்றார்களே தவிர ஒட்டுமொத்த தமிழ்மக்களின் மனங்களை கவர்ந்து வெல்லவில்லை. 

இந்த நாட்டில் மாற்றம் ஒன்று ஏற்ப்படவேண்டும் என்று இலங்கை மக்கள் விரும்பினார்கள். இந்த நாட்டை தொடர்ச்சியாக ஆண்டவர்கள் நாட்டின் தேசிய வளங்களை பயன்படுத்தி நாட்டு மக்களை பிச்சைக்காரர் ஆக்கினார்கள். எனவே மக்கள் மாற்றம் ஒன்றை விரும்பி இந்த அரசை கொண்டுவந்தார்கள். அந்த மாற்றத்தை நாங்களும் எதிர்பார்க்கின்றோம். 

இந்த நாடானது ஊழற்ற சிறந்த நிர்வாகத்தை கொண்ட. கொள்ளையடிக்காதவர்களை கொண்ட ஒரு அரசாக இருக்கவேண்டும் என்பது ஒட்டுமொத்த இலங்கை மக்களின் அவா. அந்த விருப்பம் எமக்கும் இருக்கிறது. தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்த நாட்டை நிர்வகிக்க முடியாது. நாங்கள் எண்ணிக்கையில் சிறுபாண்மையாக இருக்கிறோம். 

தமிழ்மக்களின் பிரச்சனை நீண்டகால பிரச்சனை. எனவே தமிழ்தேசிய பிரச்சனையை தீர்க்க யார் முன்வருகின்றார்களோ அவர்களுடன் இணைந்து பயணிக்க நாம் தயாராக இருக்கிறோம்.

ஆனால் இந்த அரசு தெரிவுசெய்யப்பட்ட ஆறுமாதத்திலேயே அவர்களது பயணம் வித்தியாசமாக இருக்கிறது.

மூவின மக்களும் இந்த நாட்டில் எப்போது சமமாக மதிக்கப்படுகின்றார்களோ அன்று தமிழ்கட்சி சிங்களகட்சி, முஸ்லீம் கட்சி என்ற தேவை இருக்காது. அந்த நிலையை ஏற்ப்படுத்த வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு இருக்கிறது. 

அதனை நம்பியே மக்கள் வாக்களித்தனர். எனவே குறுகிய நோக்கத்திற்காக மக்களை நீங்கள் ஏமாற்றினால் இந்த நாடு ஒருநாளும் மீட்சியடையாது. 

ஆணையிறவு உப்பில் ருசியைத் தான் பார்க்க வேண்டும் பெயரைல்ல என்று அமைச்சர் பிமல் அண்மையில் கூறினார். அவர் கூறுவது உண்மை தான். ஆனால் தெற்கில் உங்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கும் சத்தியலிங்கம் என்று பெயரை வையுங்கள். ஏன் ரத்நாயக்கா, விமல் வீரவன்ச, அந்த வன்ச, இந்த வன்ச என பெயரை வைக்கிறீர்கள். 

சத்தியலிங்கம், சுந்தரலிங்கம், பொன்னம்பலம் என உங்களது பிள்ளைகளுக்கும் பெயரை வையுங்கள். ஏன் என்றால் உங்களுக்கு பிள்ளைகள் தானே வேணும். பெயர் முக்கியமில்லை தானே. அதற்கு பிறகு நாங்கள் வாயை மூடிக் கொண்டு இருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

மக்களை சமனாக நடத்தினால் கட்சிகள் தேவையில்லை சத்தியலிங்கம் கருத்து மூவின மக்களும் இந்த நாட்டில் எப்போது சமமாக மதிக்கப்படுகின்றார்களோ அன்று தான் தமிழ்கட்சி சிங்களகட்சி,முஸ்லீம் கட்சி என்ற தேவை இருக்காது. அந்த நிலையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.வவுனியாவில் தந்தை செல்வநாயகத்தின் நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…மோகம் 30 நாள் என்று சொல்வார்கள். அந்த மோகத்தில் வந்த ஒரு கட்சி தாங்கள்தான் தமிழ்மக்கள், முஸ்லீம் மக்களுடைய ஒட்டுமொத்த பிரதிநிதிகள்  என்று சொல்கிறார்கள். ஒரு தேர்தலில் வென்றுவிட்டு அப்பிடி சொல்லமுடியாது. இந்த தேர்தல் முறையால் மாத்திரமே அவர்கள் வென்றார்களே தவிர ஒட்டுமொத்த தமிழ்மக்களின் மனங்களை கவர்ந்து வெல்லவில்லை. இந்த நாட்டில் மாற்றம் ஒன்று ஏற்ப்படவேண்டும் என்று இலங்கை மக்கள் விரும்பினார்கள். இந்த நாட்டை தொடர்ச்சியாக ஆண்டவர்கள் நாட்டின் தேசிய வளங்களை பயன்படுத்தி நாட்டு மக்களை பிச்சைக்காரர் ஆக்கினார்கள். எனவே மக்கள் மாற்றம் ஒன்றை விரும்பி இந்த அரசை கொண்டுவந்தார்கள். அந்த மாற்றத்தை நாங்களும் எதிர்பார்க்கின்றோம். இந்த நாடானது ஊழற்ற சிறந்த நிர்வாகத்தை கொண்ட. கொள்ளையடிக்காதவர்களை கொண்ட ஒரு அரசாக இருக்கவேண்டும் என்பது ஒட்டுமொத்த இலங்கை மக்களின் அவா. அந்த விருப்பம் எமக்கும் இருக்கிறது. தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்த நாட்டை நிர்வகிக்க முடியாது. நாங்கள் எண்ணிக்கையில் சிறுபாண்மையாக இருக்கிறோம். தமிழ்மக்களின் பிரச்சனை நீண்டகால பிரச்சனை. எனவே தமிழ்தேசிய பிரச்சனையை தீர்க்க யார் முன்வருகின்றார்களோ அவர்களுடன் இணைந்து பயணிக்க நாம் தயாராக இருக்கிறோம்.ஆனால் இந்த அரசு தெரிவுசெய்யப்பட்ட ஆறுமாதத்திலேயே அவர்களது பயணம் வித்தியாசமாக இருக்கிறது.மூவின மக்களும் இந்த நாட்டில் எப்போது சமமாக மதிக்கப்படுகின்றார்களோ அன்று தமிழ்கட்சி சிங்களகட்சி, முஸ்லீம் கட்சி என்ற தேவை இருக்காது. அந்த நிலையை ஏற்ப்படுத்த வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு இருக்கிறது. அதனை நம்பியே மக்கள் வாக்களித்தனர். எனவே குறுகிய நோக்கத்திற்காக மக்களை நீங்கள் ஏமாற்றினால் இந்த நாடு ஒருநாளும் மீட்சியடையாது. ஆணையிறவு உப்பில் ருசியைத் தான் பார்க்க வேண்டும் பெயரைல்ல என்று அமைச்சர் பிமல் அண்மையில் கூறினார். அவர் கூறுவது உண்மை தான். ஆனால் தெற்கில் உங்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கும் சத்தியலிங்கம் என்று பெயரை வையுங்கள். ஏன் ரத்நாயக்கா, விமல் வீரவன்ச, அந்த வன்ச, இந்த வன்ச என பெயரை வைக்கிறீர்கள். சத்தியலிங்கம், சுந்தரலிங்கம், பொன்னம்பலம் என உங்களது பிள்ளைகளுக்கும் பெயரை வையுங்கள். ஏன் என்றால் உங்களுக்கு பிள்ளைகள் தானே வேணும். பெயர் முக்கியமில்லை தானே. அதற்கு பிறகு நாங்கள் வாயை மூடிக் கொண்டு இருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement