தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் கொண்டுவரப்படுகின்ற பிரஜா சக்தி உரிமையை நாங்கள் தற்போது எதிர்க்க வேண்டிய தேவை இல்லை என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் கணைச்செல்வன் அவர்கள் தெரிவித்துள்ளார்
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
நேற்றைய(28) தினம் இடம் பெற்ற பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் அரசாங்கத்தின் பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணையை முன்வைத்தார்.
இதற்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதுடன் சுயேட்சை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
சபை முடிவின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கெளரவ உறுப்பினர் கணைச்செல்வன் அவர்கள்
கிராமங்களை அபிவிருத்தி செய்ய ஒவ்வொரு அரசாங்கங்களாலும் இந்த பிரஜா சக்தி நடைமுறைப்படுத்தப்படுகிறது. அவர்கள் எவ்வாறான வேலை திட்டத்தை செய்ய போகிறார்கள் என்று யாருக்கும் இதுவரை தெரியாது.
அது நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பே அதை எதிர்ப்பது ஒரு தவறான விடயம்.பிரதேச சபையில் பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணை கொண்டுவருவது தவறான விடயம்.
பிரஜா சக்தி உறுப்பினர்கள் மக்களுக்கு விரோதமாக செயற்பட்டால் அவர்களை நாம் எதிர்ப்போம்.ஆனால் தற்போது அவர்களை எதிர்ப்பது என்பது தவறான விடயம் எனத். தெரிவித்தார்.
பருத்தித்துறை பிரதேச சபையில் பிரஜா சக்திக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் 10 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரஜா சக்தியை தற்போது எதிர்க்க வேண்டிய தேவை இல்லை- பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் கொண்டுவரப்படுகின்ற பிரஜா சக்தி உரிமையை நாங்கள் தற்போது எதிர்க்க வேண்டிய தேவை இல்லை என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் கணைச்செல்வன் அவர்கள் தெரிவித்துள்ளார்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,நேற்றைய(28) தினம் இடம் பெற்ற பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் அரசாங்கத்தின் பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணையை முன்வைத்தார்.இதற்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதுடன் சுயேட்சை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.சபை முடிவின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கெளரவ உறுப்பினர் கணைச்செல்வன் அவர்கள்கிராமங்களை அபிவிருத்தி செய்ய ஒவ்வொரு அரசாங்கங்களாலும் இந்த பிரஜா சக்தி நடைமுறைப்படுத்தப்படுகிறது. அவர்கள் எவ்வாறான வேலை திட்டத்தை செய்ய போகிறார்கள் என்று யாருக்கும் இதுவரை தெரியாது.அது நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பே அதை எதிர்ப்பது ஒரு தவறான விடயம்.பிரதேச சபையில் பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணை கொண்டுவருவது தவறான விடயம்.பிரஜா சக்தி உறுப்பினர்கள் மக்களுக்கு விரோதமாக செயற்பட்டால் அவர்களை நாம் எதிர்ப்போம்.ஆனால் தற்போது அவர்களை எதிர்ப்பது என்பது தவறான விடயம் எனத். தெரிவித்தார். பருத்தித்துறை பிரதேச சபையில் பிரஜா சக்திக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் 10 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.