அண்மையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நாளை நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.
இனவாதத்தை தூண்டி நாட்டை தீக்கிரையாக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயங்களை இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சந்தேகநபர்கள் முகப்புத்தகத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கடந்த சில நாட்களில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மருதானை, சுன்னாகம் மற்றும் பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த 28, 35 மற்றும் 45 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பான அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இனவாதத்தை தூண்டி நாட்டை தீக்கிரையாக்க எவருக்கும் இடமில்லை பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை அண்மையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நாளை நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார். இனவாதத்தை தூண்டி நாட்டை தீக்கிரையாக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.குறித்த விடயங்களை இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சந்தேகநபர்கள் முகப்புத்தகத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கடந்த சில நாட்களில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மருதானை, சுன்னாகம் மற்றும் பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த 28, 35 மற்றும் 45 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பான அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.