• Nov 28 2024

சொல்ல எவ்வளவோ இருக்கிறது... வாய்கள் கட்டப்பட்டுள்ளன- வைத்தியர் அர்ச்சுனா வருத்தம்..!

Sharmi / Aug 10th 2024, 10:33 am
image

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் உள்ள முறைகேடுகளை முகநூல் வழியாக பல தடவைகள் வெளிப்படுத்திய வைத்தியசாலை முன்னாள் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா, அண்மையில் மன்னாரில் கைது செய்யப்பட்டு விடுதலை ஆகிய பின்னர் முதன்முறையாக நேரலையில் நேற்று இரவு பேசியிருந்தார். 

பலரின் வேண்டுகோளுக்கு இணங்க முகநூல் நேரலையில் வந்ததாகத் தெரிவித்த வைத்தியர் வணக்கம் தெரிவித்த பின்னர் பேசவில்லை, பதிவை மட்டும் முகநூலில் இட்டிருந்தார், 

அவரது முகநூல் பதிவில், 

சொல்ல எவ்வளவோ இருக்கிறது..

வாய்கள் கட்டப்பட்டுள்ளன! 

ஓடிக்கொண்டே இருக்கிறேன்.. 

என் இனத்துக்காகவும் என் நாட்டிற்காக தங்களையே அர்ப்பணித்த மறவர்களை நினைத்த வண்ணம் ஓடிக்கொண்டே இருக்கிறேன்..

என்னை நோக்கி எறியப்படுகின்ற ஒவ்வொரு கற்களையும் மலைகளாக அடுக்கிக்கொண்டு.. வாழ்க்கையில் என் இலட்சியத்தை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கிறேன்..

எனது கனவுகளையும் எனது சந்தோஷத்தையும் என்னையுமே கடைசியில் இழந்து ஓடிக்கொண்டே இருக்கிறேன்..

நடமாடும் சுதந்திரத்தைக் கூட கேள்வி ஆக்கிக் கொண்டேன்..

கண்ணீருக்குள் ஆனந்தமாக இருக்க பழகிக் கொண்டேன்..

தனிமையும் சுகம் தான் என்பதையும் சொல்லித் தந்து விட்டார்கள்..

சாகத் துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை என்பார்கள்.. என பதிவிட்டுள்ளார். 

குறித்த முகநூல் நேரலை உட்பட்ட பதிவு லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளதுடன் பகிர்ந்தும் வருகின்றனர்.



சொல்ல எவ்வளவோ இருக்கிறது. வாய்கள் கட்டப்பட்டுள்ளன- வைத்தியர் அர்ச்சுனா வருத்தம். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் உள்ள முறைகேடுகளை முகநூல் வழியாக பல தடவைகள் வெளிப்படுத்திய வைத்தியசாலை முன்னாள் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா, அண்மையில் மன்னாரில் கைது செய்யப்பட்டு விடுதலை ஆகிய பின்னர் முதன்முறையாக நேரலையில் நேற்று இரவு பேசியிருந்தார். பலரின் வேண்டுகோளுக்கு இணங்க முகநூல் நேரலையில் வந்ததாகத் தெரிவித்த வைத்தியர் வணக்கம் தெரிவித்த பின்னர் பேசவில்லை, பதிவை மட்டும் முகநூலில் இட்டிருந்தார், அவரது முகநூல் பதிவில், சொல்ல எவ்வளவோ இருக்கிறது.வாய்கள் கட்டப்பட்டுள்ளன ஓடிக்கொண்டே இருக்கிறேன். என் இனத்துக்காகவும் என் நாட்டிற்காக தங்களையே அர்ப்பணித்த மறவர்களை நினைத்த வண்ணம் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.என்னை நோக்கி எறியப்படுகின்ற ஒவ்வொரு கற்களையும் மலைகளாக அடுக்கிக்கொண்டு. வாழ்க்கையில் என் இலட்சியத்தை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கிறேன்.எனது கனவுகளையும் எனது சந்தோஷத்தையும் என்னையுமே கடைசியில் இழந்து ஓடிக்கொண்டே இருக்கிறேன்.நடமாடும் சுதந்திரத்தைக் கூட கேள்வி ஆக்கிக் கொண்டேன்.கண்ணீருக்குள் ஆனந்தமாக இருக்க பழகிக் கொண்டேன்.தனிமையும் சுகம் தான் என்பதையும் சொல்லித் தந்து விட்டார்கள்.சாகத் துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை என்பார்கள். என பதிவிட்டுள்ளார். குறித்த முகநூல் நேரலை உட்பட்ட பதிவு லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளதுடன் பகிர்ந்தும் வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement