• May 15 2024

திலீபனின் நினைவு ஊர்தி சிங்கள - தமிழ் மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் சதித்திட்டம்! தயாசிறி தெரிவிப்பு samugammedia

Chithra / Sep 20th 2023, 12:01 pm
image

Advertisement

திலீபனின் நினைவு ஊர்தியானது சிங்கள தமிழ் மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் சதித்திட்டம் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி  ஜயசேகர இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர், 

விடுதலை புலிகள் அமைப்பில்  இருந்தாலுமே அகிம்சையான ஒரு நடவடிக்கைக்காக தன்னுடைய உயிரை தியாகம் செய்த திலீபனின் நினைவு உறுதியானது.

மட்டக்களப்பில் ஆரம்பித்து திருகோணமலையில் சிங்கள கிராமத்தின் ஊடாக சென்ற போது தாக்குதல் நடத்தப்பட்டது. 

இந்த கிராமத்தில் விடுதலை புலிகள் அமைப்பில்  இருந்த பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பல சிங்கள மக்களின் குடும்பங்கள் வாழ்வதாலேயே குறித்த பேரணி மீது அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். 

இந்த பேரணிக்கு நீதிமன்றத்தில் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட ஒரு பேரணியில் கலந்துகொண்டவர்கள் மீதே இந்த  தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. 

இவ்வாறான ஒரு பேரணிக்கு அனுமதியளித்தமை தொடர்பாக போலீசாரும் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

தான் தமிழ் மக்களை எதிர்க்கவோ சிங்கள மக்களை ஆதரிக்கவோ இல்லை என்றும், சிங்கள மக்களை ஆத்திரமூட்டும் வகையில் தான் குறித்த பேரணி சிங்கள கிராமத்தினுடாக சென்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இது மீண்டும் தமிழ் சிங்கள மக்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் சதித்திட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும்,  இது தொடர்பாக அரசாங்கம்  தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


திலீபனின் நினைவு ஊர்தி சிங்கள - தமிழ் மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் சதித்திட்டம் தயாசிறி தெரிவிப்பு samugammedia திலீபனின் நினைவு ஊர்தியானது சிங்கள தமிழ் மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் சதித்திட்டம் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி  ஜயசேகர இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், விடுதலை புலிகள் அமைப்பில்  இருந்தாலுமே அகிம்சையான ஒரு நடவடிக்கைக்காக தன்னுடைய உயிரை தியாகம் செய்த திலீபனின் நினைவு உறுதியானது.மட்டக்களப்பில் ஆரம்பித்து திருகோணமலையில் சிங்கள கிராமத்தின் ஊடாக சென்ற போது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கிராமத்தில் விடுதலை புலிகள் அமைப்பில்  இருந்த பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பல சிங்கள மக்களின் குடும்பங்கள் வாழ்வதாலேயே குறித்த பேரணி மீது அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்த பேரணிக்கு நீதிமன்றத்தில் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட ஒரு பேரணியில் கலந்துகொண்டவர்கள் மீதே இந்த  தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இவ்வாறான ஒரு பேரணிக்கு அனுமதியளித்தமை தொடர்பாக போலீசாரும் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தான் தமிழ் மக்களை எதிர்க்கவோ சிங்கள மக்களை ஆதரிக்கவோ இல்லை என்றும், சிங்கள மக்களை ஆத்திரமூட்டும் வகையில் தான் குறித்த பேரணி சிங்கள கிராமத்தினுடாக சென்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். இது மீண்டும் தமிழ் சிங்கள மக்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் சதித்திட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும்,  இது தொடர்பாக அரசாங்கம்  தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement