• Sep 20 2024

நல்ல வைத்தியரை மாற்றினால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள் - ரணிலை ஆதரிக்கும் பிரசாரத்தில் அலி சப்ரி உரை

Chithra / Sep 12th 2024, 7:51 am
image

Advertisement


நல்ல வைத்தியரிடம் நீங்கள் சிகிச்சைக்குச் சென்று அதனால் நல்ல பலன் கிட்டும்போது, அந்த வைத்தியரை மாற்றினால் என்ன நடக்கும் என்பதை மக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும் என  அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தா

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

இரண்டு வருடங்களுக்கு முன்பு நாடு பெரும் இக்கட்டான நிலைமையில் இருந்தது. அப்போது ஐ.எம்.எப். நாட்டில் அனைவரையும் ஒன்றுபட்டுச் செயற்பட முன்வருமாறு வலியுறுத்தியது. 

ஆனால், எதிர்க்கட்சியினர் அதற்கு முன்வரவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு பிரதமர் பதவியை வழங்கவும் தயாராக இருந்தோம். அப்போதும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அன்று மக்கள் பட்ட கஷ்டங்கள் இன்று உள்ளனவா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நல்ல வைத்தியரிடம் நீங்கள் சிகிச்சைக்குச் சென்று அதனால் நல்ல பலன் கிட்டும்போது, அந்த வைத்தியரை மாற்றினால் என்ன நடக்கும் என்பதையும் மக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும்.

சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை சமூகத்துடன் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். சில கட்சிகள் தெற்கின் கட்சிகள் செல்லும் திசைக்கு எதிர்த்திசையில் பயணிக்க வேண்டும் என்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளனர். 

சிறுபான்மை மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்த பின்பும் அவருக்கு ஆதரவளிப்பதற்கு என்ன தடையிருக்கின்றது?

சஜித் கூறுவதைப் போல் வௌிநாட்டு செல்வந்தர்களின் உதவிகளை மட்டும் நாம் நம்பியிருக்க முடியாது. ஜே.வி.பி. ஒரு கொள்கையில்லாத கட்சியாகச் செயற்படுகின்றது.   - என்றார்.  

நல்ல வைத்தியரை மாற்றினால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள் - ரணிலை ஆதரிக்கும் பிரசாரத்தில் அலி சப்ரி உரை நல்ல வைத்தியரிடம் நீங்கள் சிகிச்சைக்குச் சென்று அதனால் நல்ல பலன் கிட்டும்போது, அந்த வைத்தியரை மாற்றினால் என்ன நடக்கும் என்பதை மக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும் என  அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தாஅம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் உரையாற்றுகையில்,இரண்டு வருடங்களுக்கு முன்பு நாடு பெரும் இக்கட்டான நிலைமையில் இருந்தது. அப்போது ஐ.எம்.எப். நாட்டில் அனைவரையும் ஒன்றுபட்டுச் செயற்பட முன்வருமாறு வலியுறுத்தியது. ஆனால், எதிர்க்கட்சியினர் அதற்கு முன்வரவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு பிரதமர் பதவியை வழங்கவும் தயாராக இருந்தோம். அப்போதும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.அன்று மக்கள் பட்ட கஷ்டங்கள் இன்று உள்ளனவா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நல்ல வைத்தியரிடம் நீங்கள் சிகிச்சைக்குச் சென்று அதனால் நல்ல பலன் கிட்டும்போது, அந்த வைத்தியரை மாற்றினால் என்ன நடக்கும் என்பதையும் மக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும்.சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை சமூகத்துடன் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். சில கட்சிகள் தெற்கின் கட்சிகள் செல்லும் திசைக்கு எதிர்த்திசையில் பயணிக்க வேண்டும் என்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளனர். சிறுபான்மை மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்த பின்பும் அவருக்கு ஆதரவளிப்பதற்கு என்ன தடையிருக்கின்றதுசஜித் கூறுவதைப் போல் வௌிநாட்டு செல்வந்தர்களின் உதவிகளை மட்டும் நாம் நம்பியிருக்க முடியாது. ஜே.வி.பி. ஒரு கொள்கையில்லாத கட்சியாகச் செயற்படுகின்றது.   - என்றார்.  

Advertisement

Advertisement

Advertisement