• Oct 13 2026

சவூதி சிறையில் அனோஜனின் நிலைமை இதுதான்!– நேரில் சந்தித்த இலங்கைத் தூதுவர் வெளியிட்ட தகவல்

Chithra / Oct 9th 2026, 11:27 am
image


மரண தண்டனை விதிக்கப்பட்டு சவூதி அரேபிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனின் நலன் குறித்து ஆராய்வதற்காக, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாட் சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.


இதன்போது, அனோஜனை நேரில் சந்தித்ததாகவும், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.


ரியாத்திலிருந்து சுமார் 450 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சிறைச்சாலையிலேயே அனோஜன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


அனோஜனைச் சந்தித்தமை மற்றும் அவரது உடல்நிலை தொடர்பான தகவல்களை, சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ள இலங்கையின் விசேட சட்டக் குழுவினருக்கு தூதுவர் தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார்.


அனோஜனை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அவருக்கான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, இலங்கையின் விசேட சட்டக் குழுவினர் கடந்த 6ஆம் திகதி சவூதி அரேபியாவுக்குப் பயணித்துள்ளனர்.

சவூதி சிறையில் அனோஜனின் நிலைமை இதுதான்– நேரில் சந்தித்த இலங்கைத் தூதுவர் வெளியிட்ட தகவல் மரண தண்டனை விதிக்கப்பட்டு சவூதி அரேபிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனின் நலன் குறித்து ஆராய்வதற்காக, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாட் சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.இதன்போது, அனோஜனை நேரில் சந்தித்ததாகவும், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.ரியாத்திலிருந்து சுமார் 450 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சிறைச்சாலையிலேயே அனோஜன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.அனோஜனைச் சந்தித்தமை மற்றும் அவரது உடல்நிலை தொடர்பான தகவல்களை, சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ள இலங்கையின் விசேட சட்டக் குழுவினருக்கு தூதுவர் தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார்.அனோஜனை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அவருக்கான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, இலங்கையின் விசேட சட்டக் குழுவினர் கடந்த 6ஆம் திகதி சவூதி அரேபியாவுக்குப் பயணித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement