• Nov 25 2024

நிகழ்நிலை காப்பு சட்டத்தில் மாற்றங்கள் செய்யவேண்டுமா என்று கேட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவே - முஜிபுர் ரகுமான்..!samugammedia

Tharun / Feb 11th 2024, 6:58 pm
image

இலங்கை வரலாற்றிலே முதலாவது தடவைதான்  ஒரு சபாநாயகர் அவர்கள் மசோதாவுக்கு  கையொப்பம் வைத்ததன் பிறகு அந்த மசோதாவில்  மாற்றங்கள் இருக்கிறதா? என்று  கேட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்   முஜிபுர் ரகுமான்  தெரிவித்துள்ளார். 

இன்று (11)  எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிகழ்நிலை காப்பு சட்டம்  எங்களுக்கு எல்லோருக்கும் தெரியும். சமூக ஊடகங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு, ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு கொண்டு நிகழ்நிலை காப்பு சட்டத்தை  வைத்துக்கொண்டு வரக்கூடிய ஜனாதிபதித் தேர்தலிலே, அவர்கள் பயன்படுத்துவதற்கு அவர்கள் முன்வந்திருக்கிறார்கள். நிகழ்நிலை காப்பு சட்டத்தை அன்று பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு சார்பாக இருக்கின்ற உறுப்பினர்கள் அதற்கு வாக்குகளை கொடுத்த அன்றைய  தினமே  அவர்கள் அதற்கு கையொப்பம் வைத்தார்கள். 

பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவதற்கு கொண்டு வர முன்பு, இந்த நாட்டில் இருக்கிற உயர் நீதிமன்றம் 13 விடயங்களை அவர்கள் வேண்டுமென்று கூறினார்கள்.  இதனை கவனத்தில் எடுத்தார்களா? இல்லையா? என்று ஒரு தகவல். அதே போன்று சந்தேகம் கடந்த பாராளுமன்றத்தில் வந்தது. பாராளுமன்றத்தில் இருக்க கூடிய எதிர்கட்சித்  தலைவர்கள் கூறினார்கள்.  சபாநாயகருக்கு ஒரு பேச்சு வார்த்தை தேவை என்று. ஆனால் அவர் அந்த பேச்சுவார்த்தையை கொடுக்கவில்லை. அதே போன்று இந்த நாட்டிலும் இருக்க கூடிய ஊடக நிறுவனங்கள் மற்றும்  சிவில் அமைப்புக்கள் கூறினார்கள். அவர்கள் கூறியது சபாநாயகருடைய ஒரு பேச்சுவார்த்தை தேவை என்று. ஏனெனில் அரசாங்கம் முன்வைத்த உயர் நீதிமன்றம் வழங்கிய 13ம்  திருத்தத்தை இவர்கள் செய்யவில்லை என்று கூறினார்கள். அப்போது  அதற்கும் இடம் கொடுக்கவில்லை. சபாநாயகர் அவர்கள் கூறியிருக்கிறார்கள், அவர்களினுடைய கையொப்பத்தை வைத்ததன் பிறகு இதில் சந்தேகமான விடயங்கள் இருந்தா என்று சொல்லுங்கள் என கூறியிருக்கிறார். 

இலங்கை வரலாற்றிலே முதலாவது தடவைதான் ஒரு சபாநாயகர் அவர்கள் மசோதாவுக்கு  கையொப்பம் வைத்ததன் பிறகு அந்த மசோதாவில் மாற்றங்கள் இருக்கிறதா என்று கோரிய முதலாவது சந்தர்ப்பம். என  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை காப்பு சட்டத்தில் மாற்றங்கள் செய்யவேண்டுமா என்று கேட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவே - முஜிபுர் ரகுமான்.samugammedia இலங்கை வரலாற்றிலே முதலாவது தடவைதான்  ஒரு சபாநாயகர் அவர்கள் மசோதாவுக்கு  கையொப்பம் வைத்ததன் பிறகு அந்த மசோதாவில்  மாற்றங்கள் இருக்கிறதா என்று  கேட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்   முஜிபுர் ரகுமான்  தெரிவித்துள்ளார். இன்று (11)  எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நிகழ்நிலை காப்பு சட்டம்  எங்களுக்கு எல்லோருக்கும் தெரியும். சமூக ஊடகங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு, ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு கொண்டு நிகழ்நிலை காப்பு சட்டத்தை  வைத்துக்கொண்டு வரக்கூடிய ஜனாதிபதித் தேர்தலிலே, அவர்கள் பயன்படுத்துவதற்கு அவர்கள் முன்வந்திருக்கிறார்கள். நிகழ்நிலை காப்பு சட்டத்தை அன்று பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு சார்பாக இருக்கின்ற உறுப்பினர்கள் அதற்கு வாக்குகளை கொடுத்த அன்றைய  தினமே  அவர்கள் அதற்கு கையொப்பம் வைத்தார்கள். பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவதற்கு கொண்டு வர முன்பு, இந்த நாட்டில் இருக்கிற உயர் நீதிமன்றம் 13 விடயங்களை அவர்கள் வேண்டுமென்று கூறினார்கள்.  இதனை கவனத்தில் எடுத்தார்களா இல்லையா என்று ஒரு தகவல். அதே போன்று சந்தேகம் கடந்த பாராளுமன்றத்தில் வந்தது. பாராளுமன்றத்தில் இருக்க கூடிய எதிர்கட்சித்  தலைவர்கள் கூறினார்கள்.  சபாநாயகருக்கு ஒரு பேச்சு வார்த்தை தேவை என்று. ஆனால் அவர் அந்த பேச்சுவார்த்தையை கொடுக்கவில்லை. அதே போன்று இந்த நாட்டிலும் இருக்க கூடிய ஊடக நிறுவனங்கள் மற்றும்  சிவில் அமைப்புக்கள் கூறினார்கள். அவர்கள் கூறியது சபாநாயகருடைய ஒரு பேச்சுவார்த்தை தேவை என்று. ஏனெனில் அரசாங்கம் முன்வைத்த உயர் நீதிமன்றம் வழங்கிய 13ம்  திருத்தத்தை இவர்கள் செய்யவில்லை என்று கூறினார்கள். அப்போது  அதற்கும் இடம் கொடுக்கவில்லை. சபாநாயகர் அவர்கள் கூறியிருக்கிறார்கள், அவர்களினுடைய கையொப்பத்தை வைத்ததன் பிறகு இதில் சந்தேகமான விடயங்கள் இருந்தா என்று சொல்லுங்கள் என கூறியிருக்கிறார். இலங்கை வரலாற்றிலே முதலாவது தடவைதான் ஒரு சபாநாயகர் அவர்கள் மசோதாவுக்கு  கையொப்பம் வைத்ததன் பிறகு அந்த மசோதாவில் மாற்றங்கள் இருக்கிறதா என்று கோரிய முதலாவது சந்தர்ப்பம். என  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement