• Apr 14 2026

நாட்டில் எரிபொருள் கையிருப்புள்ள காலம் இதுதான்..! மின் துண்டிப்பும் ஏற்படலாம்! அமைச்சர் அதிர்ச்சி தகவல்

Chithra / Mar 17th 2026, 11:29 am
image


சாதாரண நுகர்வின் கீழ் நாட்டில் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி  வெளிப்படுத்தினார். 


பாராளுமன்றத்தில் இன்று (17) விசேட உரையொன்றை ஆற்றி இதனைக் குறிப்பிட்டார். 


அமைச்சரின் அறிவிப்பின்படி, 


சாதாரண டீசல்: ஏப்ரல் 12 ஆம் திகதி வரை.


92 ஒக்டேன் பெட்ரோல்: ஏப்ரல் 23 ஆம் திகதி வரை.


சுப்பர் டீசல் மற்றும் 95 ஒக்டேன் பெட்ரோல்: மே மாதம் 10 ஆம் திகதி வரை.


எரிபொருள் விநியோகத்தை சீராகப் பேணுவதற்கும், மேலதிக எரிபொருள் தொகைகளை நாட்டிற்கு வரவழைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


இதேவேளை

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படுமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


இதுவரை ஒரு மணிநேரம் கூட மின்வெட்டு இன்றி நாம் கொண்டு செல்கிறோம், ஆனால் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய ஒரு காலம் வரவும் கூடும் என அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.


நாட்டில் எரிபொருள் கையிருப்புள்ள காலம் இதுதான். மின் துண்டிப்பும் ஏற்படலாம் அமைச்சர் அதிர்ச்சி தகவல் சாதாரண நுகர்வின் கீழ் நாட்டில் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி  வெளிப்படுத்தினார். பாராளுமன்றத்தில் இன்று (17) விசேட உரையொன்றை ஆற்றி இதனைக் குறிப்பிட்டார். அமைச்சரின் அறிவிப்பின்படி, சாதாரண டீசல்: ஏப்ரல் 12 ஆம் திகதி வரை.92 ஒக்டேன் பெட்ரோல்: ஏப்ரல் 23 ஆம் திகதி வரை.சுப்பர் டீசல் மற்றும் 95 ஒக்டேன் பெட்ரோல்: மே மாதம் 10 ஆம் திகதி வரை.எரிபொருள் விநியோகத்தை சீராகப் பேணுவதற்கும், மேலதிக எரிபொருள் தொகைகளை நாட்டிற்கு வரவழைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.இதேவேளைநாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.இதுவரை ஒரு மணிநேரம் கூட மின்வெட்டு இன்றி நாம் கொண்டு செல்கிறோம், ஆனால் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய ஒரு காலம் வரவும் கூடும் என அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement