• Dec 09 2024

வடக்கு, கிழக்கில் இம்முறை அதிக சுயேச்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டி..!

Sharmi / Oct 9th 2024, 8:12 am
image

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் போட்டியிட இம்முறை அதிக சுயேச்சைக் குழுக்கள் களம் இறக்கப்பட்டு கட்டுப் பணம் செலுத்தியுள்ளன.

இதற்கமைய, அம்பாறை மாவட்டத்தில் 37 சுயேச்சைக் குழுக்களும், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா 22 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளன.

இதேபோன்று வன்னி மாவட்டத்தில் 21 சுயேச்சைக் குழுக்களும், திருகோணமலை மாவட்டத்தில் 17 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளன.

இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் அதிக சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்திய மாவட்டங்களாகவும் வடக்கு, கிழக்கு  காணப்படுகின்றது.

இதேநேரம் சுயேச்சையாகப் போட்டியிடுவோர் கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்னமும் காணப்படுவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

இலங்கையில் அதிக மக்கள் தொகை கொண்ட கொழும்பு மாவட்டத்தில் 17 சுயேச்சைக் குழுக்களும், கம்பஹா மாவட்டத்தில் 12 சுயேச்சைக் குழுக்களுமே கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கில் இம்முறை அதிக சுயேச்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டி. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் போட்டியிட இம்முறை அதிக சுயேச்சைக் குழுக்கள் களம் இறக்கப்பட்டு கட்டுப் பணம் செலுத்தியுள்ளன.இதற்கமைய, அம்பாறை மாவட்டத்தில் 37 சுயேச்சைக் குழுக்களும், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா 22 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளன.இதேபோன்று வன்னி மாவட்டத்தில் 21 சுயேச்சைக் குழுக்களும், திருகோணமலை மாவட்டத்தில் 17 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளன.இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் அதிக சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்திய மாவட்டங்களாகவும் வடக்கு, கிழக்கு  காணப்படுகின்றது.இதேநேரம் சுயேச்சையாகப் போட்டியிடுவோர் கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்னமும் காணப்படுவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.இலங்கையில் அதிக மக்கள் தொகை கொண்ட கொழும்பு மாவட்டத்தில் 17 சுயேச்சைக் குழுக்களும், கம்பஹா மாவட்டத்தில் 12 சுயேச்சைக் குழுக்களுமே கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement