• Apr 07 2025

ஊழலை ஒழிக்க வந்தவர்கள் சட்டவிரோத தொழிலுக்கு அனுமதி பெற்றுக் கொடுக்கிறார்கள்-மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவர் தெரிவிப்பு

Thansita / Apr 6th 2025, 7:21 pm
image

ஊழலை ஒழிக்க வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத தொழில்களுக்கு அனுமதி பெற்றுக் கொடுப்பதாக மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவரும்,பருத்தித்துறை பிரதேச சபைக்கான சுயேட்சை வேட்பாளருமான  இ.முரளிதரன் தெரிவித்துள்ளார் 

தனது இல்லத்தில் இன்று (6)ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 03.04.2025 அன்று வடமராட்சி கிழக்கில் இருந்து தேசிய மக்கள் சக்தியினர் தமக்கு ஆதரவானவர்களை அழைத்து சென்று யாழ்ப்பாணம் நீரியல்வளத்திணைக்களத்தில் சட்டவிரோத தொழில் முறைகளுக்கு அனுமதி பெற்றுக் கொடுத்ததாக மக்கள் சிலர் என்னிடம் முறைப்பாடளித்துள்ளனர்.

இதனுடைய உண்மைதன்மை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி கிழக்கு இணைப்பாளர் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் 

சில நபர்களுக்கு அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டதாகவும் அவர்களில் ஒரு சிலர் சட்டவிரோதமாக தொழில் புரிவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்

ஊழலை ஒழிப்போமென கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குகளை பெறுவதற்காக சட்டவிரோத தொழில்களை செய்யுங்கள் என்று மக்களிடம் கூறுகிறார்கள்.அவர்களை கைது செய்யாது ஊக்குவிக்கிறார்கள்

தேர்தல் காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் தேர்தல் சட்டங்களை  மீறும் ஒரு செயல்.ஊழலை ஒழிக்க வந்தவர்களே இன்று சட்டவிரோத தொழிலுக்கு அனுமதி பெற்றுக் கொடுக்கிறார்கள்.இன்றும் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை,நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது.இவ்வாறான சூழலில் இந்த செயற்பாடு மக்களுக்கு இழைக்கும் துரோகம்

பாரத பிரதமர் இலங்கை வந்த போது தீவு கடற்பரப்புக்களில் அதிகளவான இந்திய இழுவை மடி படகுகள் அட்டகாசம் செய்துள்ளனர்.அனைத்தையும் ஒழிப்போம்,நிறுத்துவோம் என ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இன்று என்ன செய்கின்றது?

எமது கடல் வளம் அழிந்து கொண்டு செல்கின்ற இந்த சூழலில் சட்டவிரோத தொழில் முறைகளுக்கு அனுமதி பெற்றுக் கொடுப்பது பிழையான விடயம்

மக்களின் முறைப்பாட்டை எழுத்துமூலம் கோரியுள்ளேன்.இதை மீனவ அமைப்புகளுக்கு வெளிப்படுத்தவுள்ளேன் 

வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு யார் காரணம் என்பதனை மக்கள் இனியாவது புரிந்து கொண்டு வருங்காலத்தில் செயற்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.


ஊழலை ஒழிக்க வந்தவர்கள் சட்டவிரோத தொழிலுக்கு அனுமதி பெற்றுக் கொடுக்கிறார்கள்-மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவர் தெரிவிப்பு ஊழலை ஒழிக்க வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத தொழில்களுக்கு அனுமதி பெற்றுக் கொடுப்பதாக மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவரும்,பருத்தித்துறை பிரதேச சபைக்கான சுயேட்சை வேட்பாளருமான  இ.முரளிதரன் தெரிவித்துள்ளார் தனது இல்லத்தில் இன்று (6)ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த 03.04.2025 அன்று வடமராட்சி கிழக்கில் இருந்து தேசிய மக்கள் சக்தியினர் தமக்கு ஆதரவானவர்களை அழைத்து சென்று யாழ்ப்பாணம் நீரியல்வளத்திணைக்களத்தில் சட்டவிரோத தொழில் முறைகளுக்கு அனுமதி பெற்றுக் கொடுத்ததாக மக்கள் சிலர் என்னிடம் முறைப்பாடளித்துள்ளனர்.இதனுடைய உண்மைதன்மை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி கிழக்கு இணைப்பாளர் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் சில நபர்களுக்கு அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டதாகவும் அவர்களில் ஒரு சிலர் சட்டவிரோதமாக தொழில் புரிவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்ஊழலை ஒழிப்போமென கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குகளை பெறுவதற்காக சட்டவிரோத தொழில்களை செய்யுங்கள் என்று மக்களிடம் கூறுகிறார்கள்.அவர்களை கைது செய்யாது ஊக்குவிக்கிறார்கள்தேர்தல் காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் தேர்தல் சட்டங்களை  மீறும் ஒரு செயல்.ஊழலை ஒழிக்க வந்தவர்களே இன்று சட்டவிரோத தொழிலுக்கு அனுமதி பெற்றுக் கொடுக்கிறார்கள்.இன்றும் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை,நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது.இவ்வாறான சூழலில் இந்த செயற்பாடு மக்களுக்கு இழைக்கும் துரோகம்பாரத பிரதமர் இலங்கை வந்த போது தீவு கடற்பரப்புக்களில் அதிகளவான இந்திய இழுவை மடி படகுகள் அட்டகாசம் செய்துள்ளனர்.அனைத்தையும் ஒழிப்போம்,நிறுத்துவோம் என ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இன்று என்ன செய்கின்றதுஎமது கடல் வளம் அழிந்து கொண்டு செல்கின்ற இந்த சூழலில் சட்டவிரோத தொழில் முறைகளுக்கு அனுமதி பெற்றுக் கொடுப்பது பிழையான விடயம்மக்களின் முறைப்பாட்டை எழுத்துமூலம் கோரியுள்ளேன்.இதை மீனவ அமைப்புகளுக்கு வெளிப்படுத்தவுள்ளேன் வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு யார் காரணம் என்பதனை மக்கள் இனியாவது புரிந்து கொண்டு வருங்காலத்தில் செயற்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement