• Mar 17 2025

சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் பொலிஸாருடன் நட்பு; இது ஆபத்தான நிலை! வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு

Chithra / Mar 16th 2025, 3:09 pm
image


சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் பொலிஸாருடன் நட்பாக இருப்பதால், பொலிஸாரிடம் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு மக்கள் அஞ்சுகின்றனர். இது ஆபத்தான நிலைமை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் 15ஆவது ஆண்டு நிறைவு விழா, கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அறக்கட்டளையின் தலைவரும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளருமான மருத்துவக் கலாநிதி த.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், அறக்கட்டளையின் 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு உருவாக்கப்பட்ட மலரை வெளியிட்டு வைத்து உரையாற்றினார்.

அவர் தனது உரையில், 

2003ஆம் ஆண்டிலிருந்து இறுதிப்போர் வரையில் இந்த மாவட்டத்தில் மேலதிக மாவட்டச் செயலராகவும், மாவட்டச் செயலராகவும் பணியாற்றியிருக்கின்றேன். 

2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அளவில் எம்மை கிளிநொச்சி நகரிலிருந்து வெளியேறுமாறு இராணுவ அதிகாரிகள் அறிவுறுத்தினார். அதன் பின்னர் நாம் இங்கிருந்து இடம்பெயர்ந்து தருமபுரம் விளையாட்டு மைதானத்தில் ஓலைக்கொட்டில் அமைத்து அங்கிருந்து மாவட்டச் செயலகத்தை இயக்கினோம். 

அப்போதும் இரவு நேரத்தில் இந்த மாவட்டத்தின் கல்வி அபிவிருத்திக்கான செயற்பாடுகள் தொடர்பில் இங்குள்ள பலருடனும் கலந்துரையாடியிருக்கின்றேன்.

இறுதிப்போர் முடிந்து இங்கு மக்கள் மீளக்குடியமர்ந்த பின்னர் எல்லாவற்றையும் இழந்த நிலையில் இருந்த அவர்களுக்கு கல்வியைப் பெற்றுக்கொள்வது பெரும் சிரமமாக இருந்தது. 

அந்த நேரத்தில் மக்களுக்கு இந்த அறக்கட்டளை கைகொடுத்தது. 2010ஆம் ஆண்டு நான் முல்லைத்தீவு மாவட்டச் செயலராகப் பதவியேற்றேன். அங்கும் இந்த மாதிரியான நிலைமையே இருந்தது. 

பல்கலைக்கழக அனுமதி கிடைத்த பலர், கல்வியைத் தொடர முடியாதளவுக்கு அவர்களின் வறுமைச் சூழல் இருந்தது. அதனால் பலர் பல்கலைக்கழக கல்வியைத் தொலைக்கவேண்டியிருந்தது. 

முல்லைத்தீவில் கல்வி நிதியம் ஒன்றை ஆரம்பித்தாலும், அங்கு இருந்த தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. அவ்வாறான சூழலில், இந்த அறக்கட்டளையின் தலைவராக இருக்கின்ற மருத்துவக் கலாநிதி சத்தியமூர்த்தியுடன் இருந்த தொடர்பு காரணமாக, முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் உங்களின் அறக்கட்டளை ஊடான உதவிகளைப் பெற்றுக்கொடுத்திருக்கின்றேன். 

இந்த உதவிகள் தொடரவேண்டும். வெளிநாட்டிலிருப்பவர்கள் தொடர்ந்து எமக்கு நிதி வழங்கிக் கொண்டிருக்க முடியாது. இன்று உதவிகளைப் பெற்று உயர் நிலையை அடையும் ஒவ்வொவரும் தாமும் உதவிகளைச் செய்து மற்றையவர்களை வளர்த்து விட வேண்டும். அதன் மூலம்தான் இந்த அறக்கட்டளை தொடர்ச்சியாகச் செயற்படக் கூடியதாக இருக்கும். அந்தப் பொறிமுறையை பின்பற்றுகின்றார் என நம்புகின்றேன். 

அன்றைய போர்ச் சூழலிலும் கல்விக்கான வசதிகள் உள்ளிட்ட சகல சேவைகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. வளங்கள் குறைவாக இருந்தாலும் மக்களின் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்தோம். இன்று வளங்களும், தொடர்பாடலும் பெருகிவிட்டாலும் மக்களுக்கான சேவைகள் என்பது அருகிவிட்டது. 

அன்றைய எமது சேவைகளுக்கும் இன்றைய காலத்துச் சேவைகளுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இன்று பொதுமகன் அரச திணைக்களத்துக்குச் சென்றால் அரசாங்க அதிகாரிகள் பந்தடிப்பதுபோன்று அலைக்கழிக்கின்றனர். அல்லது இழுத்தடிக்கின்றனர். 

போர்க்காலத்தில் பணியாற்றியவர்கள் மக்களுக்குச் சேவை செய்யும் நோக்குடன் பணியாற்றினார்கள். இன்று அப்படியல்ல. 

கடந்த காலங்களில் அரசியலுக்காக ஒரு சில அரசாங்கத் தொழில்கள் உருவாக்கப்பட்டன. தொழிலுக்காக சம்பளம் வழங்கவில்லை. சம்பளம் வழங்கவேண்டும் என்பதற்காக அரசாங்கத் தொழில்கள் உருவாக்கப்பட்டன. இதனால் உருவாகிய அரசாங்க அதிகாரிகள் பலர் தங்கள் சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுக்கின்றார்கள் இல்லை. 

ஏழையைக் கண்டால் உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் இயல்பாக மனதில் எழவேண்டும். அப்படிச் சிந்திப்பவர்கள் இன்று குறைவு. ஏழைக்குச் செய்யும் சேவையும், பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்யும் சேவையும்தான் மிகப்பெரிய சேவை, என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரனும் கலந்துகொண்டார். அறக்கட்டளையின் வளர்ச்சிக்காக அரும்பணியாற்றியவர்கள் இந்த நிகழ்வில் ஆளுநரால் கௌரவிக்கப்பட்டனர்.


சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் பொலிஸாருடன் நட்பு; இது ஆபத்தான நிலை வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் பொலிஸாருடன் நட்பாக இருப்பதால், பொலிஸாரிடம் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு மக்கள் அஞ்சுகின்றனர். இது ஆபத்தான நிலைமை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் குறிப்பிட்டார்.கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் 15ஆவது ஆண்டு நிறைவு விழா, கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அறக்கட்டளையின் தலைவரும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளருமான மருத்துவக் கலாநிதி த.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், அறக்கட்டளையின் 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு உருவாக்கப்பட்ட மலரை வெளியிட்டு வைத்து உரையாற்றினார்.அவர் தனது உரையில், 2003ஆம் ஆண்டிலிருந்து இறுதிப்போர் வரையில் இந்த மாவட்டத்தில் மேலதிக மாவட்டச் செயலராகவும், மாவட்டச் செயலராகவும் பணியாற்றியிருக்கின்றேன். 2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அளவில் எம்மை கிளிநொச்சி நகரிலிருந்து வெளியேறுமாறு இராணுவ அதிகாரிகள் அறிவுறுத்தினார். அதன் பின்னர் நாம் இங்கிருந்து இடம்பெயர்ந்து தருமபுரம் விளையாட்டு மைதானத்தில் ஓலைக்கொட்டில் அமைத்து அங்கிருந்து மாவட்டச் செயலகத்தை இயக்கினோம். அப்போதும் இரவு நேரத்தில் இந்த மாவட்டத்தின் கல்வி அபிவிருத்திக்கான செயற்பாடுகள் தொடர்பில் இங்குள்ள பலருடனும் கலந்துரையாடியிருக்கின்றேன்.இறுதிப்போர் முடிந்து இங்கு மக்கள் மீளக்குடியமர்ந்த பின்னர் எல்லாவற்றையும் இழந்த நிலையில் இருந்த அவர்களுக்கு கல்வியைப் பெற்றுக்கொள்வது பெரும் சிரமமாக இருந்தது. அந்த நேரத்தில் மக்களுக்கு இந்த அறக்கட்டளை கைகொடுத்தது. 2010ஆம் ஆண்டு நான் முல்லைத்தீவு மாவட்டச் செயலராகப் பதவியேற்றேன். அங்கும் இந்த மாதிரியான நிலைமையே இருந்தது. பல்கலைக்கழக அனுமதி கிடைத்த பலர், கல்வியைத் தொடர முடியாதளவுக்கு அவர்களின் வறுமைச் சூழல் இருந்தது. அதனால் பலர் பல்கலைக்கழக கல்வியைத் தொலைக்கவேண்டியிருந்தது. முல்லைத்தீவில் கல்வி நிதியம் ஒன்றை ஆரம்பித்தாலும், அங்கு இருந்த தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. அவ்வாறான சூழலில், இந்த அறக்கட்டளையின் தலைவராக இருக்கின்ற மருத்துவக் கலாநிதி சத்தியமூர்த்தியுடன் இருந்த தொடர்பு காரணமாக, முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் உங்களின் அறக்கட்டளை ஊடான உதவிகளைப் பெற்றுக்கொடுத்திருக்கின்றேன். இந்த உதவிகள் தொடரவேண்டும். வெளிநாட்டிலிருப்பவர்கள் தொடர்ந்து எமக்கு நிதி வழங்கிக் கொண்டிருக்க முடியாது. இன்று உதவிகளைப் பெற்று உயர் நிலையை அடையும் ஒவ்வொவரும் தாமும் உதவிகளைச் செய்து மற்றையவர்களை வளர்த்து விட வேண்டும். அதன் மூலம்தான் இந்த அறக்கட்டளை தொடர்ச்சியாகச் செயற்படக் கூடியதாக இருக்கும். அந்தப் பொறிமுறையை பின்பற்றுகின்றார் என நம்புகின்றேன். அன்றைய போர்ச் சூழலிலும் கல்விக்கான வசதிகள் உள்ளிட்ட சகல சேவைகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. வளங்கள் குறைவாக இருந்தாலும் மக்களின் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்தோம். இன்று வளங்களும், தொடர்பாடலும் பெருகிவிட்டாலும் மக்களுக்கான சேவைகள் என்பது அருகிவிட்டது. அன்றைய எமது சேவைகளுக்கும் இன்றைய காலத்துச் சேவைகளுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இன்று பொதுமகன் அரச திணைக்களத்துக்குச் சென்றால் அரசாங்க அதிகாரிகள் பந்தடிப்பதுபோன்று அலைக்கழிக்கின்றனர். அல்லது இழுத்தடிக்கின்றனர். போர்க்காலத்தில் பணியாற்றியவர்கள் மக்களுக்குச் சேவை செய்யும் நோக்குடன் பணியாற்றினார்கள். இன்று அப்படியல்ல. கடந்த காலங்களில் அரசியலுக்காக ஒரு சில அரசாங்கத் தொழில்கள் உருவாக்கப்பட்டன. தொழிலுக்காக சம்பளம் வழங்கவில்லை. சம்பளம் வழங்கவேண்டும் என்பதற்காக அரசாங்கத் தொழில்கள் உருவாக்கப்பட்டன. இதனால் உருவாகிய அரசாங்க அதிகாரிகள் பலர் தங்கள் சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுக்கின்றார்கள் இல்லை. ஏழையைக் கண்டால் உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் இயல்பாக மனதில் எழவேண்டும். அப்படிச் சிந்திப்பவர்கள் இன்று குறைவு. ஏழைக்குச் செய்யும் சேவையும், பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்யும் சேவையும்தான் மிகப்பெரிய சேவை, என்றார் ஆளுநர்.இந்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரனும் கலந்துகொண்டார். அறக்கட்டளையின் வளர்ச்சிக்காக அரும்பணியாற்றியவர்கள் இந்த நிகழ்வில் ஆளுநரால் கௌரவிக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement