தமிழ் தேசிய கூட்டமைப்பு மீளவும் பலம் பெறச் செய்ய வேண்டுமாக இருந்தால் தமிழ் தேசிய காட்சிகள் அணைத்து ஒன்று திரண்டு தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை எட்டுவதற்கு மட்டும் தான் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட அவர் தமிழரசுக்கட்சி தலைவர் தெரிவு தொடர்பாகவும் எதிர்காலத்தில் ஒன்றாக பயணிப்பது தொடர்பாகவும் ஊடகவிலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு பலப்படுத்துவதாக அல்லது பலப்படுத்தப்போவதாக அதேபோல் குறிப்பாக 2009 ஆம் ஆண்டுக்கு முதல் விடுதலை புலிகளால் அவர்களின் அனுசரணையோடு உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவடைந்துள்ள நிலையில் அப்போது இருந்த கூட்டமைப்பை மீளவும் உருவாக்கப் போகின்றேன் என்று சொல்லியிருக்கின்றார்.
உண்மையிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரிலே யாருமே இல்லை. கடைசியாக நடந்த உள்ளுராட்சி தேர்தல் வேட்பு மனுக்களின் போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டது. உண்மையிலே தற்பொழுது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பாக ஐந்து காட்சிகள் ஏற்கனவே கூட்டமைப்போடு இருந்த இரண்டு கட்சிகளோடு ஏனைய மூன்று காட்சிகளை இணைத்து இன்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றோம்.
மேலும், கடந்தகாலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த இரா.சம்பந்தனாக இருக்கலாம், அல்லது தமிழரசுக்கட்சியிலே இருந்த தலைவர்களாக இருக்கலாம். அவர்கள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு சிதைவுறுவதற்கு காரணமாக இருந்திருக்கலாம். கடந்த உள்ளுராட்சி தேர்தலிலே சுமந்திரன் அவர்கள் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுவதாக முடிவெடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு விலகிச் சென்ற நிலையாக இருக்கலாம். அல்லது அதற்கு முன்பு தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருக்கின்ற காலங்களிலே ஸ்ரீதரன் கூட அல்லது சம்பந்தன் கூட பல தவறுகளை செய்திருக்கின்றார்கள்.
2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பு மனுக்களின் போது பங்காளிக் கட்சிகளுக்கு உரிய ஜனநாயக ரீதியாக அல்லது உரிய மனச்சாட்சிப்படியாக அந்த தொகுதிப்பங்கீடுகள் செய்யப்படாத ஒரு நிலைமையினை நாங்கள் பார்க்க கூடியதாக இருந்தது.
குறிப்பாக கிளிநொச்சியில் ஏனைய ஒரு கட்சிகளுக்கு எந்த ஒரு வட்டாரத்தில் கூட பகிர்ந்து கொடுக்கப்படவில்லை. இங்கே கொடுக்கப்படவில்லை என்ற முறைப்பாட்டை சம்பந்தன் அவர்களிடம் கூறுகின்ற போது திருகோணமலையில் அது சம்பந்தமான தவறு நடக்காது என்று கூறினார். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் செய்த அதே தவறை சம்பந்தன் செய்தார். ஆகவே ஒட்டு மொத்தமாக தவறு செய்தவர்கள்தான் இன்று மீண்டும் தலைவர்களாக இருந்திருக்கின்றார்கள், இருக்கப்போகின்றார்கள். அவர்கள் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒற்றுமைப்பட்டு மீண்டும் பலமாக்க போகின்ற அந்த விடயத்தை நாங்கள் முழுமையாக நம்பலாமா என்ற ஒரு சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனினுடைய செயல்பாடுகளை பொறுத்து தான் அதனுடைய பலம் எதிர்காலத்தில் தெரிய வேண்டிவரும். என மேலும் தெரிவித்துள்ளார்
தவறு செய்தவர்களே தமிழரசுக்கட்சியின் தலைவர்களாக உள்ளனர் - வினோ நோகராதலிங்கம் தெரிவிப்பு.samugammedia தமிழ் தேசிய கூட்டமைப்பு மீளவும் பலம் பெறச் செய்ய வேண்டுமாக இருந்தால் தமிழ் தேசிய காட்சிகள் அணைத்து ஒன்று திரண்டு தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை எட்டுவதற்கு மட்டும் தான் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட அவர் தமிழரசுக்கட்சி தலைவர் தெரிவு தொடர்பாகவும் எதிர்காலத்தில் ஒன்றாக பயணிப்பது தொடர்பாகவும் ஊடகவிலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு பலப்படுத்துவதாக அல்லது பலப்படுத்தப்போவதாக அதேபோல் குறிப்பாக 2009 ஆம் ஆண்டுக்கு முதல் விடுதலை புலிகளால் அவர்களின் அனுசரணையோடு உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவடைந்துள்ள நிலையில் அப்போது இருந்த கூட்டமைப்பை மீளவும் உருவாக்கப் போகின்றேன் என்று சொல்லியிருக்கின்றார். உண்மையிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரிலே யாருமே இல்லை. கடைசியாக நடந்த உள்ளுராட்சி தேர்தல் வேட்பு மனுக்களின் போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டது. உண்மையிலே தற்பொழுது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பாக ஐந்து காட்சிகள் ஏற்கனவே கூட்டமைப்போடு இருந்த இரண்டு கட்சிகளோடு ஏனைய மூன்று காட்சிகளை இணைத்து இன்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றோம். மேலும், கடந்தகாலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த இரா.சம்பந்தனாக இருக்கலாம், அல்லது தமிழரசுக்கட்சியிலே இருந்த தலைவர்களாக இருக்கலாம். அவர்கள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு சிதைவுறுவதற்கு காரணமாக இருந்திருக்கலாம். கடந்த உள்ளுராட்சி தேர்தலிலே சுமந்திரன் அவர்கள் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுவதாக முடிவெடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு விலகிச் சென்ற நிலையாக இருக்கலாம். அல்லது அதற்கு முன்பு தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருக்கின்ற காலங்களிலே ஸ்ரீதரன் கூட அல்லது சம்பந்தன் கூட பல தவறுகளை செய்திருக்கின்றார்கள். 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பு மனுக்களின் போது பங்காளிக் கட்சிகளுக்கு உரிய ஜனநாயக ரீதியாக அல்லது உரிய மனச்சாட்சிப்படியாக அந்த தொகுதிப்பங்கீடுகள் செய்யப்படாத ஒரு நிலைமையினை நாங்கள் பார்க்க கூடியதாக இருந்தது. குறிப்பாக கிளிநொச்சியில் ஏனைய ஒரு கட்சிகளுக்கு எந்த ஒரு வட்டாரத்தில் கூட பகிர்ந்து கொடுக்கப்படவில்லை. இங்கே கொடுக்கப்படவில்லை என்ற முறைப்பாட்டை சம்பந்தன் அவர்களிடம் கூறுகின்ற போது திருகோணமலையில் அது சம்பந்தமான தவறு நடக்காது என்று கூறினார். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் செய்த அதே தவறை சம்பந்தன் செய்தார். ஆகவே ஒட்டு மொத்தமாக தவறு செய்தவர்கள்தான் இன்று மீண்டும் தலைவர்களாக இருந்திருக்கின்றார்கள், இருக்கப்போகின்றார்கள். அவர்கள் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒற்றுமைப்பட்டு மீண்டும் பலமாக்க போகின்ற அந்த விடயத்தை நாங்கள் முழுமையாக நம்பலாமா என்ற ஒரு சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனினுடைய செயல்பாடுகளை பொறுத்து தான் அதனுடைய பலம் எதிர்காலத்தில் தெரிய வேண்டிவரும். என மேலும் தெரிவித்துள்ளார்