• Dec 04 2024

அநுர அரசைக் கவிழ்க்க நினைப்பவர்களுக்கு எதிர்காலத்தில் சிறைதான்! எச்சரித்த அமைச்சர்

Chithra / Dec 3rd 2024, 1:30 pm
image

 

அநுர  அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கும் எதிர்க்கட்சிகள் எதிர்காலத்தில் சிறைச்சாலைக்கு செல்லவேண்டி ஏற்படும் என அமைச்சர் சமந்த வித்யாரத்ன  தெரிவித்துள்ளார்.

ரிதிமாலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆட்சியைக் கவிழ்ப்பதாக கருத்து வெளியிடும் எதிர்கட்சிகளுக்கு வெளியே தெரியாவிடினும், அவர்களின் பணி தொடர்பான கோப்புகள் உள்ளிருந்து உருவாக்கப்படுகின்றன.

இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் ஒன்றிரண்டு வழக்குகள் நீதிமன்றத்துக்கு வரும். 

வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வரும்போது, ​​அரசைக் கவிழ்க்க நினைப்பவர்கள் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அரசை யாராலும் கவிழ்க்க முடியாது” என தெரிவித்தார்.

இதேவேளை இனவாதத்தை தூண்டி நாட்டை தீக்கிரையாக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என  பாராளுமன்றத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.


அநுர அரசைக் கவிழ்க்க நினைப்பவர்களுக்கு எதிர்காலத்தில் சிறைதான் எச்சரித்த அமைச்சர்  அநுர  அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கும் எதிர்க்கட்சிகள் எதிர்காலத்தில் சிறைச்சாலைக்கு செல்லவேண்டி ஏற்படும் என அமைச்சர் சமந்த வித்யாரத்ன  தெரிவித்துள்ளார்.ரிதிமாலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.ஆட்சியைக் கவிழ்ப்பதாக கருத்து வெளியிடும் எதிர்கட்சிகளுக்கு வெளியே தெரியாவிடினும், அவர்களின் பணி தொடர்பான கோப்புகள் உள்ளிருந்து உருவாக்கப்படுகின்றன.இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் ஒன்றிரண்டு வழக்குகள் நீதிமன்றத்துக்கு வரும். வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வரும்போது, ​​அரசைக் கவிழ்க்க நினைப்பவர்கள் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அரசை யாராலும் கவிழ்க்க முடியாது” என தெரிவித்தார்.இதேவேளை இனவாதத்தை தூண்டி நாட்டை தீக்கிரையாக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என  பாராளுமன்றத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement