• Sep 20 2024

இலங்கையிலிருந்து பல ஆயிரம் கோடி சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது! - சுரேஸ் வெளியிட்ட தகவல் SamugamMedia

Chithra / Feb 27th 2023, 7:27 pm
image

Advertisement

இலங்கையிலிருந்து பல ஆயிரம் கோடி சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைத் தலைவர்களில் ஒருவரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இன்று யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அத்துடன் மகிந்த மற்றும் கோட்டாபய ரஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்திலும் பல்வேறுபட்ட பொருளாதார குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்களுடன் தொடர்புடைய பலபேர் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இவ்வாறான குற்றங்களை விசாரணை செய்யாது அரசாங்கம் வாயை மூடி மௌனியாகவே உள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் இவ்வாறான குற்றவாளிகளை பாதுகாக்கின்ற நடவடிக்கையில் மட்டுமே செயற்படுவதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைத்தது என்ற வரலாறே இலங்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையிலிருந்து பல ஆயிரம் கோடி சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது - சுரேஸ் வெளியிட்ட தகவல் SamugamMedia இலங்கையிலிருந்து பல ஆயிரம் கோடி சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைத் தலைவர்களில் ஒருவரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.இன்று யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.அத்துடன் மகிந்த மற்றும் கோட்டாபய ரஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்திலும் பல்வேறுபட்ட பொருளாதார குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த விடயங்களுடன் தொடர்புடைய பலபேர் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே இவ்வாறான குற்றங்களை விசாரணை செய்யாது அரசாங்கம் வாயை மூடி மௌனியாகவே உள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் இவ்வாறான குற்றவாளிகளை பாதுகாக்கின்ற நடவடிக்கையில் மட்டுமே செயற்படுவதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.இவ்வாறு ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைத்தது என்ற வரலாறே இலங்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement