தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (NMRA) பிரதம நிறைவேறு அதிகாரி (CEO) சவீன் சேமகே, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பொது சுகாதார நிபுணரான டாக்டர் சேமகே, ஜனவரி 2024 இல் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
மருந்துகள் விலை நிர்ணயம் செய்வதிலும், பொது நிதியைச் சேமிக்க ஏகபோக நிறுவனங்களை உடைப்பதிலும் நான் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கடந்த இரண்டு முதல் மூன்று வாரங்களாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் மருந்துத் துறைக்குள் நிறைய பதற்றம் நிலவியது.
எனக்கு அச்சுறுத்தல்கள் வந்தன என்று டாக்டர் சேமகே தெரிவித்துள்ளார்.
உயிருக்கு அச்சுறுத்தல்; தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பிரதம நிறைவேறு அதிகாரி இராஜினாமா தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (NMRA) பிரதம நிறைவேறு அதிகாரி (CEO) சவீன் சேமகே, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.பொது சுகாதார நிபுணரான டாக்டர் சேமகே, ஜனவரி 2024 இல் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். மருந்துகள் விலை நிர்ணயம் செய்வதிலும், பொது நிதியைச் சேமிக்க ஏகபோக நிறுவனங்களை உடைப்பதிலும் நான் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கடந்த இரண்டு முதல் மூன்று வாரங்களாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் மருந்துத் துறைக்குள் நிறைய பதற்றம் நிலவியது.எனக்கு அச்சுறுத்தல்கள் வந்தன என்று டாக்டர் சேமகே தெரிவித்துள்ளார்.