• Jun 22 2024

தமிழர் பகுதியில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் மூவர் கைது..!

Chithra / Jun 14th 2024, 12:03 pm
image

Advertisement

 

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி கந்தசுவமி கோவிலுக்கு முன்பாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு  இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை சோதனைக்கு உட்படுத்திய போதே இவ்வாறு அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த அமெரிக்க டொலர்களை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் தடயப்பொருட்கள் அனைத்தும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்தனர்.


தமிழர் பகுதியில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் மூவர் கைது.  கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி கந்தசுவமி கோவிலுக்கு முன்பாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு  இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை சோதனைக்கு உட்படுத்திய போதே இவ்வாறு அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.குறித்த அமெரிக்க டொலர்களை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் தடயப்பொருட்கள் அனைத்தும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement