• Jun 22 2024

இலங்கையில் பாரிய விபத்தில் சிக்கவிருந்த பேருந்து - 40 உயிர்களை காப்பாற்றிய சாரதியின் சாமர்த்தியம்

Chithra / Jun 14th 2024, 11:54 am
image

Advertisement

 

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தை பாரிய விபத்தில் இருந்து தடுத்து 40 பயணிகளின் உயிரை காப்பாற்றிய சாரதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

இடங்கொட கலத்துர வீதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பாரிய பள்ளத்தில் விழும் நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் விபத்து தடுக்கப்பட்டது.

நேற்று காலை கலவானையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளது.

வீதியின் ஓரத்தில் இருந்த மதில் நோக்கி பேருந்து திருப்பி, ஏற்படவிருந்த பாரிய விபத்தை சாரதி தடுத்துள்ளார்.

வீதியின் மறுபுறம் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் விபத்து ஏற்பட்டிருந்தால், பல மரணங்கள் ஏற்பட்டிருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் சேறும் சகதியுமாக இருப்பதால் பல வாகனங்கள் விபத்தில் சிக்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இலங்கையில் பாரிய விபத்தில் சிக்கவிருந்த பேருந்து - 40 உயிர்களை காப்பாற்றிய சாரதியின் சாமர்த்தியம்  கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தை பாரிய விபத்தில் இருந்து தடுத்து 40 பயணிகளின் உயிரை காப்பாற்றிய சாரதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.இடங்கொட கலத்துர வீதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பாரிய பள்ளத்தில் விழும் நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் விபத்து தடுக்கப்பட்டது.நேற்று காலை கலவானையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளது.வீதியின் ஓரத்தில் இருந்த மதில் நோக்கி பேருந்து திருப்பி, ஏற்படவிருந்த பாரிய விபத்தை சாரதி தடுத்துள்ளார்.வீதியின் மறுபுறம் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் விபத்து ஏற்பட்டிருந்தால், பல மரணங்கள் ஏற்பட்டிருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.வீதியில் சேறும் சகதியுமாக இருப்பதால் பல வாகனங்கள் விபத்தில் சிக்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement