• Feb 11 2026

சம்பூரில் டைனமைத் வெடிபொருட்களுடன் மூவர் கைது.!

Aathira / Jan 17th 2026, 8:18 am
image

சம்பூர் கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட முயன்ற மூவர், நேற்று (16) மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பூர் கடற்பகுதியில் நேற்று மாலை வழமையான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், சந்தேகத்திற்குரிய முறையில் நடமாடிய மீன்பிடி படகொன்றை மறித்துச் சோதனையிட்டனர்.

இதன்போது, குறித்த படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று டைனமைட் வெடிபொருள் கட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, டைனமைட் வெடிபொருட்கள், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரப் படகு மற்றும் ஏனைய உபகரணங்களை கடற்படையினர் கைப்பற்றினர். 

கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று சனிக்கிழமை (17) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். 

கடல் வளங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இவ்வாறான வெடிபொருள் பாவனை குறித்து கடற்படையினர் மற்றும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பூரில் டைனமைத் வெடிபொருட்களுடன் மூவர் கைது. சம்பூர் கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட முயன்ற மூவர், நேற்று (16) மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பூர் கடற்பகுதியில் நேற்று மாலை வழமையான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், சந்தேகத்திற்குரிய முறையில் நடமாடிய மீன்பிடி படகொன்றை மறித்துச் சோதனையிட்டனர்.இதன்போது, குறித்த படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று டைனமைட் வெடிபொருள் கட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து, டைனமைட் வெடிபொருட்கள், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரப் படகு மற்றும் ஏனைய உபகரணங்களை கடற்படையினர் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று சனிக்கிழமை (17) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். கடல் வளங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இவ்வாறான வெடிபொருள் பாவனை குறித்து கடற்படையினர் மற்றும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement