• Feb 11 2026

திருமலையில் அரச எம்.பியின் அழுத்தத்தாலேயே தேரர்கள் உட்பட பொதுமக்கள் சிறையில் அடைப்பு.! விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

Aathira / Jan 17th 2026, 8:12 am
image

திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழுத்தம் காரணமாகவே தேரர்கள் உட்பட பொதுமக்கள் சிலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று நேற்று திருகோணமலையில் வைத்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

திருகோணமலை விளக்கமறியல் சாலையில் வைக்கப்பட்டுள்ள வனவாசி பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உட்பட 4 தேரர்களை இன்று பார்வையிட்ட பின்னர் விமல் வீரவன்ச மேற்கண்ட கருத்தை வெளியிட்டார்.

"கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் திணைக்களம் மீது தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அழுத்தம் மேற்கொண்டுள்ளார். தற்போது அவர் தந்திரமாக விலகிவிட்டார். ஆனால், திணைக்களம் தனித்து விடப்பட்டுள்ளது." - என்றும் அவர் மேலும் கூறினார்.

திருமலையில் அரச எம்.பியின் அழுத்தத்தாலேயே தேரர்கள் உட்பட பொதுமக்கள் சிறையில் அடைப்பு. விமல் வீரவன்ச குற்றச்சாட்டு திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழுத்தம் காரணமாகவே தேரர்கள் உட்பட பொதுமக்கள் சிலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று நேற்று திருகோணமலையில் வைத்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.திருகோணமலை விளக்கமறியல் சாலையில் வைக்கப்பட்டுள்ள வனவாசி பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உட்பட 4 தேரர்களை இன்று பார்வையிட்ட பின்னர் விமல் வீரவன்ச மேற்கண்ட கருத்தை வெளியிட்டார்."கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் திணைக்களம் மீது தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அழுத்தம் மேற்கொண்டுள்ளார். தற்போது அவர் தந்திரமாக விலகிவிட்டார். ஆனால், திணைக்களம் தனித்து விடப்பட்டுள்ளது." - என்றும் அவர் மேலும் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement