ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்கள் நேற்று (13) இறுதிக்குள் தமது தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன்படி, 3 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வேட்பாளர்களுக்கு செலவின அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (13) நள்ளிரவுடன் முடிவடைந்தது.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 38 ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதேவேளை, இன்று (14) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, 28 அரசியல் கட்சிகள் தமது செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தலைவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான 21 நாட்களுக்குள் அதற்கான செலவின அறிக்கைகளை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு முன்னர் குறிப்பிட்டிருந்தது.
அதன்படி, உரிய காலத்திற்குள் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத மூன்று வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்கள் நேற்று (13) இறுதிக்குள் தமது தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.இதன்படி, 3 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.அந்த வேட்பாளர்களுக்கு செலவின அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (13) நள்ளிரவுடன் முடிவடைந்தது.இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 38 ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இதேவேளை, இன்று (14) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, 28 அரசியல் கட்சிகள் தமது செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தலைவர் குறிப்பிட்டார்.ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான 21 நாட்களுக்குள் அதற்கான செலவின அறிக்கைகளை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு முன்னர் குறிப்பிட்டிருந்தது.அதன்படி, உரிய காலத்திற்குள் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.