• Nov 22 2024

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - அடுத்த 24 மணிநேரத்திற்கு ஆபத்து

Chithra / Oct 14th 2024, 2:04 pm
image


அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இது அடுத்த 2 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி,

மேற்கு - வடமேற்கு திசையில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

06 மற்றும் 12 வடக்கு அட்சரேகைகள் மற்றும் 81 மற்றும் 93 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடைப்பட்ட கடல் பகுதிகளில், ஒரு கி.மீ.க்கு மிக பலமான காற்று. 60-70 வரை, கனமழை பெய்யும் சாத்தியம் மற்றும் கடல் சீற்றத்துடன் இருக்கும்.

மேற்குறிப்பிட்ட வரைபடத்தில் “எச்சரிக்கை” பிரிவின் கீழ் குறிக்கப்பட்டுள்ள கடல் பகுதியில் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் பயணம் செய்ய வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் மீனவ மற்றும் கடல்சார் சமூகம் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - அடுத்த 24 மணிநேரத்திற்கு ஆபத்து அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, இது அடுத்த 2 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி,மேற்கு - வடமேற்கு திசையில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.06 மற்றும் 12 வடக்கு அட்சரேகைகள் மற்றும் 81 மற்றும் 93 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடைப்பட்ட கடல் பகுதிகளில், ஒரு கி.மீ.க்கு மிக பலமான காற்று. 60-70 வரை, கனமழை பெய்யும் சாத்தியம் மற்றும் கடல் சீற்றத்துடன் இருக்கும்.மேற்குறிப்பிட்ட வரைபடத்தில் “எச்சரிக்கை” பிரிவின் கீழ் குறிக்கப்பட்டுள்ள கடல் பகுதியில் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் பயணம் செய்ய வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் மீனவ மற்றும் கடல்சார் சமூகம் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement