2025 - 2026ஆம் ஆண்டு வரையான கால பகுதிக்கான, இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்துக்கான தலைவர் பதவிக்காக வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த தலைவர் பதவிக்கான தேர்தலானது, 2025 பெப்ரவரி 19ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் தலைவர் அனுர மெத்தேகொட, சம்மேளனத்தின் முன்னாள் செயலாளர்களான ராஜீவ் அமரசூரிய மற்றும் சுனில் அபேயரத்ன ஆகியோர் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.
அதேநேரத்தில் சட்டத்தரணி சதுர கல்ஹேனவும், சம்மேளனத்தின் செயலாளர் பதவியை இரண்டாவது முறையாக தொடரும் வகையில் தமது வேட்புமனுவை சமர்ப்பித்தார்.
போட்டியின்மையால், 2025 - 2026 காலத்திற்காக, சம்மேளனத்தின் செயலாளராக சட்டத்தரணி சதுர கல்ஹேன போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் புதிய தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி 2025 - 2026ஆம் ஆண்டு வரையான கால பகுதிக்கான, இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்துக்கான தலைவர் பதவிக்காக வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. குறித்த தலைவர் பதவிக்கான தேர்தலானது, 2025 பெப்ரவரி 19ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. இந்நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் தலைவர் அனுர மெத்தேகொட, சம்மேளனத்தின் முன்னாள் செயலாளர்களான ராஜீவ் அமரசூரிய மற்றும் சுனில் அபேயரத்ன ஆகியோர் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளனர். அதேநேரத்தில் சட்டத்தரணி சதுர கல்ஹேனவும், சம்மேளனத்தின் செயலாளர் பதவியை இரண்டாவது முறையாக தொடரும் வகையில் தமது வேட்புமனுவை சமர்ப்பித்தார். போட்டியின்மையால், 2025 - 2026 காலத்திற்காக, சம்மேளனத்தின் செயலாளராக சட்டத்தரணி சதுர கல்ஹேன போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.