அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கு, ரூபா ஒரு இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதித்து சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறகர் பகுதியில் அனுமதி பெறாத இடத்தில் மணல் அகழ்வு நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த வியாழக்கிழமை (22) சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பொலிஸ் பிரிவினரும் மல்வத்தை விசேட அதிரடிப்படையினரும் இணைந்து விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின் போது, மணல் அகழ்வில் ஈடுபட்டுவிட்டு உழவு இயந்திரங்களில் தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபர்கள் வீதியில் வைத்து மறிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
சோதனையின் போது, பாதுகாப்பு கவசங்கள் இன்றி பாதுகாப்பற்ற முறையில் மணல் ஏற்றிச் சென்ற 3 உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றை இயக்கிய 3 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்களும் சான்றுப்பொருட்களாக சம்மாந்துறை நீதவான் நூர்தீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டன.
வழக்கை விசாரித்த நீதவான், சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றத்திற்காக மூவருக்கும் மொத்தமாக ரூ.1.10 இலட்சம் தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கை, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனை மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பெரேராவின் வழிகாட்டலின் கீழ், ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினரும் மல்வத்தை விசேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவருக்கு ரூ.1.10 இலட்சம் தண்டப்பணம் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கு, ரூபா ஒரு இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதித்து சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறகர் பகுதியில் அனுமதி பெறாத இடத்தில் மணல் அகழ்வு நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த வியாழக்கிழமை (22) சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பொலிஸ் பிரிவினரும் மல்வத்தை விசேட அதிரடிப்படையினரும் இணைந்து விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.இந்த நடவடிக்கையின் போது, மணல் அகழ்வில் ஈடுபட்டுவிட்டு உழவு இயந்திரங்களில் தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபர்கள் வீதியில் வைத்து மறிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.சோதனையின் போது, பாதுகாப்பு கவசங்கள் இன்றி பாதுகாப்பற்ற முறையில் மணல் ஏற்றிச் சென்ற 3 உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றை இயக்கிய 3 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்களும் சான்றுப்பொருட்களாக சம்மாந்துறை நீதவான் நூர்தீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டன. வழக்கை விசாரித்த நீதவான், சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றத்திற்காக மூவருக்கும் மொத்தமாக ரூ.1.10 இலட்சம் தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டார்.இந்த நடவடிக்கை, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனை மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பெரேராவின் வழிகாட்டலின் கீழ், ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினரும் மல்வத்தை விசேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.