• Apr 19 2025

கண்டியில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி - பெண்கள் உட்பட மூவர் கைது

Chithra / Apr 16th 2025, 3:43 pm
image

 

கண்டி, தவுலகல பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று புதன்கிழமை (16) கைது செய்யப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்

கண்டி நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் விபச்சார விடுதியின் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டியில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி - பெண்கள் உட்பட மூவர் கைது  கண்டி, தவுலகல பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இன்று புதன்கிழமை (16) கைது செய்யப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்கண்டி நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் விபச்சார விடுதியின் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும்  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement