• Dec 28 2024

பிறந்து மூன்று மாதங்களேயான ஆண் குழந்தை பரிதாப மரணம் - யாழில் சோகம்

Chithra / Dec 27th 2024, 7:35 am
image


பிறந்து மூன்று மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று  யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்தது.

பன்னாலை, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த பங்கஜன் சிறீதிகன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குழந்தைக்கு கடந்த 24ஆம் திகதி காய்ச்சல், இருமல், சளி ஏற்பட்டது. 

அதற்கு சிகிச்சை வழங்குவதாக பெற்றோர் குழந்தையை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். 

இந்நிலையில் குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டவேளை மேலதிக சிகிச்சைக்காக குழந்தை நேற்றுமுன்தினம் (25) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 

இருதய செயலிழப்பு காரணமாக குழந்தை உயிரிழந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.


பிறந்து மூன்று மாதங்களேயான ஆண் குழந்தை பரிதாப மரணம் - யாழில் சோகம் பிறந்து மூன்று மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று  யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்தது.பன்னாலை, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த பங்கஜன் சிறீதிகன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த குழந்தைக்கு கடந்த 24ஆம் திகதி காய்ச்சல், இருமல், சளி ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை வழங்குவதாக பெற்றோர் குழந்தையை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டவேளை மேலதிக சிகிச்சைக்காக குழந்தை நேற்றுமுன்தினம் (25) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தது.குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இருதய செயலிழப்பு காரணமாக குழந்தை உயிரிழந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement