யாழ். கொக்குவில் பகுதியில் ஹெரோயினுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இரண்டு இளைஞர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ் , கொக்குவில் பகுதியில் ஹெரோயினுடன் பெண் உட்பட மூவர் கைது யாழ். கொக்குவில் பகுதியில் ஹெரோயினுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுகுறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இரண்டு இளைஞர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து 325 மில்லிக்கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.குறித்த சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.