• Sep 20 2024

மூன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!

Chithra / Feb 2nd 2023, 8:29 am
image

Advertisement

மூன்று அரசியல் கைதிகள் நேற்றிரவு(01) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குணசிங்கம் கிருபானந்தம், கிளிநொச்சியைச் சேர்ந்த செல்லையா சதீஸ்குமார், மன்னாரை சேர்ந்த விக்ரர் ரொபின்சன் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.

கிருபானந்தம் 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். இவருக்குக் கடந்த மாதமே 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 

இதேபோன்று, விக்ரர் ரொபின்சன் கடந்த 2014ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் இருவரும் நேற்றிரவு விடுதலையாகினர்.

இதேநேரம் விடுதலை செய்யப்பட்ட மூன்றாவது நபரான கிளிநொச்சியைச் சேர்ந்த செல்லையா சதீஸ்குமார் 2007ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். 

கிளிநொச்சி மருத்துவமனையின் அம்புலன்ஸ் சாரதியான இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 

தனது தண்டனைக்கு எதிராக அவர் மேன்முறையீடு செய்துள்ளார். இதனால் அவர் நேற்றிரவு விடுவிக்கப்படவில்லை. மேன்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற்றதும் விடுவிக்கப்படுவார் என்று அறியவருகின்றது.

மூன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை மூன்று அரசியல் கைதிகள் நேற்றிரவு(01) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணத்தை சேர்ந்த குணசிங்கம் கிருபானந்தம், கிளிநொச்சியைச் சேர்ந்த செல்லையா சதீஸ்குமார், மன்னாரை சேர்ந்த விக்ரர் ரொபின்சன் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.கிருபானந்தம் 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். இவருக்குக் கடந்த மாதமே 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று, விக்ரர் ரொபின்சன் கடந்த 2014ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் இருவரும் நேற்றிரவு விடுதலையாகினர்.இதேநேரம் விடுதலை செய்யப்பட்ட மூன்றாவது நபரான கிளிநொச்சியைச் சேர்ந்த செல்லையா சதீஸ்குமார் 2007ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். கிளிநொச்சி மருத்துவமனையின் அம்புலன்ஸ் சாரதியான இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. தனது தண்டனைக்கு எதிராக அவர் மேன்முறையீடு செய்துள்ளார். இதனால் அவர் நேற்றிரவு விடுவிக்கப்படவில்லை. மேன்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற்றதும் விடுவிக்கப்படுவார் என்று அறியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement