• Apr 15 2026

60 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கர வண்டி விபத்து

dorin / Mar 17th 2026, 7:12 pm
image

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா - போடைஸ் பிரதான வீதியில், பட்டல்கலை பகுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், அதன் சாரதியும் காயமடைந்துள்ளார்.

கொட்டகலை பகுதியிலிருந்து வர்த்தக நடவடிக்கைக்காக புளியாவத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது வர்த்தகத்திற்காகக் கொண்டு செல்லப்பட்ட சவர்க்காரம், சலவைத்தூள் உள்ளிட்ட பொருட்கள் சிதறிக் காணப்பட்டன.

விபத்து நிகழ்ந்தவுடன் பிரதேசவாசிகள் உடனடியாகச் செயற்பட்டு, குடைசாய்ந்திருந்த முச்சக்கரவண்டியினை மீட்டுச் சாரதியைக் காப்பாற்றியுள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்க மயக்கம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

60 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கர வண்டி விபத்து ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா - போடைஸ் பிரதான வீதியில், பட்டல்கலை பகுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், அதன் சாரதியும் காயமடைந்துள்ளார்.கொட்டகலை பகுதியிலிருந்து வர்த்தக நடவடிக்கைக்காக புளியாவத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.விபத்தின் போது வர்த்தகத்திற்காகக் கொண்டு செல்லப்பட்ட சவர்க்காரம், சலவைத்தூள் உள்ளிட்ட பொருட்கள் சிதறிக் காணப்பட்டன.விபத்து நிகழ்ந்தவுடன் பிரதேசவாசிகள் உடனடியாகச் செயற்பட்டு, குடைசாய்ந்திருந்த முச்சக்கரவண்டியினை மீட்டுச் சாரதியைக் காப்பாற்றியுள்ளனர்.சாரதிக்கு ஏற்பட்ட தூக்க மயக்கம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement