• Apr 03 2025

பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி கோர விபத்து..! முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஸ்தலத்தில் பலி

Chithra / Jan 9th 2024, 3:49 pm
image

 

மிஹிந்தலை பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அநுராதபுரம் - கலத்தேவ பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரான இந்திரசிறி என்ற நபரே உயிரிழந்தார்.

முச்சக்கர வண்டியை செலுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,

தனியார் பஸ் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பஸ்ஸில் பயணித்த 4 பயணிகள் காயமடைந்த நிலையில்,

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி கோர விபத்து. முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஸ்தலத்தில் பலி  மிஹிந்தலை பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் அநுராதபுரம் - கலத்தேவ பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரான இந்திரசிறி என்ற நபரே உயிரிழந்தார்.முச்சக்கர வண்டியை செலுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,தனியார் பஸ் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் பஸ்ஸில் பயணித்த 4 பயணிகள் காயமடைந்த நிலையில்,அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement