• Sep 20 2024

ரயிலிலுடன் முச்சக்கர வண்டி மோதி கோர விபத்து - இரு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

Chithra / Dec 18th 2022, 8:59 am
image

Advertisement

கொழும்பிலிருந்து சிலாபத்தை நோக்கி சென்று கொண்டிருந்த இரவு ரயிலிலுடன் முச்சக்கர வண்டி மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம்  நேற்று சனிக்கிழமை  இரவு 9:45 மணியளவில்  இடம்பெற்றது.

ரயில்வே கடவையின் தடுப்புப் பலகை போடப்பட்டிருந்த நிலையிலும் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்த நிலையிலும் பழைய சிலாபம் வீதி திசையை நோக்கி முச்சக்கர வண்டி பயணித்துள்ளது.

இதன்போது  கொச்சிக்கடை திசையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் முச்சக்கர வண்டி மோதியுள்ளது. 

இந்த விபத்து காரணமாக முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் ரயில்வே கடவையின் தடுப்பு பலகையும் சேதமடைந்துள்ளது.

சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் நீர்கொழும்பு பெரியமுல்லை, அபேசிங்கபுர ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 19 வயது இளைஞர்கள் ஆவர்.

காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர்  இவர்கள் இருவரும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர்களின் கவனயீனமே இதற்கு பிரதான காரணம் என்ன சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


ரயிலிலுடன் முச்சக்கர வண்டி மோதி கோர விபத்து - இரு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி கொழும்பிலிருந்து சிலாபத்தை நோக்கி சென்று கொண்டிருந்த இரவு ரயிலிலுடன் முச்சக்கர வண்டி மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம்  நேற்று சனிக்கிழமை  இரவு 9:45 மணியளவில்  இடம்பெற்றது.ரயில்வே கடவையின் தடுப்புப் பலகை போடப்பட்டிருந்த நிலையிலும் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்த நிலையிலும் பழைய சிலாபம் வீதி திசையை நோக்கி முச்சக்கர வண்டி பயணித்துள்ளது.இதன்போது  கொச்சிக்கடை திசையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் முச்சக்கர வண்டி மோதியுள்ளது. இந்த விபத்து காரணமாக முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் ரயில்வே கடவையின் தடுப்பு பலகையும் சேதமடைந்துள்ளது.சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் நீர்கொழும்பு பெரியமுல்லை, அபேசிங்கபுர ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 19 வயது இளைஞர்கள் ஆவர்.காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.பின்னர்  இவர்கள் இருவரும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர்களின் கவனயீனமே இதற்கு பிரதான காரணம் என்ன சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement