• Nov 22 2024

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றம்

Chithra / Oct 13th 2024, 3:16 pm
image


எதிர்வரும் 15ஆம் திகதி முதல் முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களை குறைக்கவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி, மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தினர் இன்றைய தினம் ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தனர்.

அவர்கள்  மேலும் தெரிவிக்கையில்,

ஆரம்ப கட்டணமாக 200 ரூபாவாகவும் தொடர்ந்து வரும் கட்டணமாக 100 ரூபாவாக பெறப்பட்ட நிலையில் புதிய அரசாங்கத்தின் பெற்றோல் விலை குறைப்பு காரணமாக ஆரம்ப கட்டணமாக 150 ரூபாவும் தொடர்ந்து வரும் கட்டணமாக 100 ரூபாவும் காத்திருப்பு கட்டணமாக நிமிடத்திற்கு ஐந்து ரூபாவாகவும் அறவிடுவதாக தீர்மானாத்துள்ளதாக தெரிவித்தனர்.

கொழும்பில் ஆரம்ப கட்டணம் நூறு ரூபாவாக இருந்தாலும், கிளிநொச்சி மாவட்டத்தில் வீதிகள் சீர் இன்மையால் இந்த கட்டணத்தை அறவிடுகின்றோம். 

எதிர்காலத்தில் கிளிநொச்சி மாவட்டமும் அபிவிருத்தி அடையும் நிலையில் கொழும்புக்கு சீராக கட்டணத்தை கொண்டுவர முடியும் என தெரிவித்தனர்.

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களை குறைக்கவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி, மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தினர் இன்றைய தினம் ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தனர்.அவர்கள்  மேலும் தெரிவிக்கையில்,ஆரம்ப கட்டணமாக 200 ரூபாவாகவும் தொடர்ந்து வரும் கட்டணமாக 100 ரூபாவாக பெறப்பட்ட நிலையில் புதிய அரசாங்கத்தின் பெற்றோல் விலை குறைப்பு காரணமாக ஆரம்ப கட்டணமாக 150 ரூபாவும் தொடர்ந்து வரும் கட்டணமாக 100 ரூபாவும் காத்திருப்பு கட்டணமாக நிமிடத்திற்கு ஐந்து ரூபாவாகவும் அறவிடுவதாக தீர்மானாத்துள்ளதாக தெரிவித்தனர்.கொழும்பில் ஆரம்ப கட்டணம் நூறு ரூபாவாக இருந்தாலும், கிளிநொச்சி மாவட்டத்தில் வீதிகள் சீர் இன்மையால் இந்த கட்டணத்தை அறவிடுகின்றோம். எதிர்காலத்தில் கிளிநொச்சி மாவட்டமும் அபிவிருத்தி அடையும் நிலையில் கொழும்புக்கு சீராக கட்டணத்தை கொண்டுவர முடியும் என தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement