• May 25 2025

சிறையில் அடைக்கப்பட்ட துமிந்த மருத்துவமனையில் அனுமதி!

Chithra / May 25th 2025, 10:07 am
image

 கைது  செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

துமிந்தவின் உடல் நிலை தொடர்பில் கிடைத்த பரிசோதனை அறிக்கைக்கு அமைய, அவரை உடல்நிலை மோசமடைந்து வருவதால் அவரை சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வெள்ளவத்தை ஹவ்லொக் சிட்டி வீட்டு வளாகத்தில் பொலிஸாரால் தங்க முலாம் பூசப்பட்ட டி56 ரக  துப்பாக்கி கைப்பற்றப்பட்டமை தொடர்பில் முன்னாள் அமைச்சர்  துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை பதில் நீதவான் சாந்த குமாரகே உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

சிறையில் அடைக்கப்பட்ட துமிந்த மருத்துவமனையில் அனுமதி  கைது  செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  துமிந்தவின் உடல் நிலை தொடர்பில் கிடைத்த பரிசோதனை அறிக்கைக்கு அமைய, அவரை உடல்நிலை மோசமடைந்து வருவதால் அவரை சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளவத்தை ஹவ்லொக் சிட்டி வீட்டு வளாகத்தில் பொலிஸாரால் தங்க முலாம் பூசப்பட்ட டி56 ரக  துப்பாக்கி கைப்பற்றப்பட்டமை தொடர்பில் முன்னாள் அமைச்சர்  துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டிருந்தார்.இந்த நிலையில், நேற்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை பதில் நீதவான் சாந்த குமாரகே உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement